News October 23, 2024
காவல் நிலையத்தில் பிளேடால் அறுத்து தற்கொலை முயற்சி

பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் யோகேஸ்வரன். இவர், மதன் என்பவரை தாக்கியதால் விசாரணைக்காக பெரும்பாக்கம் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். அப்போது, திடீரென தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் தனது கழுத்தில் அறுத்துக் கொண்டார். பதறிய போலீசார் அவரை மீட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News November 9, 2025
செங்கல்பட்டு: லைசன்ஸ் எடுக்க இனி அலைய வேண்டாம்!

செங்கல்பட்டு மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் https://parivahansewas.com/ என்ற இணையதளம் சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். (SHARE பண்ணுங்க).
News November 9, 2025
செங்கல்பட்டு: திருநங்கையிடம் வழிப்பறி; 3 பேர் கைது

தாம்பரம் கடப்பேரியை சேர்ந்தவர் ஆர்த்தி (24). திருநங்கை. கடை கடையாக சென்று வசுல் செய்து வாழ்ந்து வந்தார். நேற்று கடப்பேரி ஜிஎஸ்டி சாலையில் நடந்து வந்து கொண்டிருக்கும் போது இவரை வழிமறித்த 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.2500/- யை பறித்து சென்றனர். புகாரின் பேரில் தாம்பரம் போலீசார் பிரதீப் (24), மதன் (20), தினேஷ் (19) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
News November 9, 2025
செங்கல்பட்டு: ஆதார் அட்டையில் முகவரி மாற்ற எளிய வழி!

ஆதார் கார்டில் இனி நீங்களே முகவரியை அப்டேட் செய்யலாம். 1.முதலில்<


