News October 23, 2024

 புவியியல் & சுரங்கத் துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக்கூட்டம்

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக்கூட்டம் தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் இயற்கை வளங்கள் துறை செயலாளர் கே. பனீந்திர ரெட்டி தலைமையிலும், தி.மலை மாவட்ட ஆட்சித் தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் முன்னிலையிலும் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News August 19, 2025

தி.மலை: உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

தி.மலை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நாளை (ஆக.20)
திருவண்ணாமலை, வந்தவாசி, துரிஞ்சாபுரம், புதுப்பாளையம், அனக்காவூர், தண்டராம்பட்டு ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று, இறப்பு சான்று போன்றவற்றிக்கு மனு அளித்து பயன்பெறலாம். மேலும், <>இங்கு கிளிக் செய்து <<>>முகாம் நடைபெறும் இடங்களை கண்டறியலாம்.

News August 19, 2025

தி.மலை அருகே விபத்து

image

தி.மலை, அமர்நாத்புதூரைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி பச்சையம்மாள். இவர்களது மகள் திருமணத்திற்கு, உறவினர்களுக்கு அழைப்பிதழ் வழங்க பைக்கில் செல்வராஜ், பச்சையம்மாள் இருவரும் சென்றுள்ளனர். அப்போது கலசபாக்கம் அருகே சென்ற போது பின்னால் வந்த லாரி, பைக் மீது மோதியதில் பச்சையம்மாள் சம்பவயிடத்திலே உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News August 19, 2025

தி.மலை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று (ஆக-19) நடைபெறும் இடங்களை மேலே உள்ள படத்தில் காணலாம். தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று, இறப்பு சான்று, சொத்து வரி, பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் இந்த முகாமில் பெறலாம்.

error: Content is protected !!