News October 23, 2024
சவரனுக்கு ₹59,000ஐ நெருங்கும் தங்கம் விலை

தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில், புதிய உச்சம் தொட்டு சவரன் ₹59,000ஐ நெருங்கியது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ₹320 உயர்ந்து ஒரு சவரன் ₹58,720க்கும், கிராமுக்கு ₹40 உயர்ந்து ஒரு கிராம் ₹7,340க்கும் விற்கப்படுகிறது. பண்டிகை காலம் மற்றும் சுப முகூர்த்த காலங்கள் என்பதால் நகை வாங்க காத்திருந்த மக்கள் விலை உயர்வால் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
Similar News
News February 6, 2026
போதைப் பொருள் வழக்கில் நடிகைகள் கைது.. காரணம்

உயர் ரக போதைப்பொருள்களை விற்பனை செய்து வந்த தமிழ் நடிகைகள் வின்சி (எ) நிவேதா & அஞ்சு கிருஷ்ணா உள்பட 9 பேர் கைதாகியுள்ளனர். சினிமாவில் போதிய வாய்ப்பு இல்லாத நிலையில், போதைப் பொருள் விற்பனையில் வின்சி இறங்கியுள்ளார். இதற்காக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, கூட்டாளிகளுடன் மீட்டிங் போட்டுள்ளார். மேலும் சில நடிகர்களுக்கும் போதைப் பொருள் சப்ளை செய்துள்ளதால் அவர்களையும் கைது செய்ய போலீஸார் விரைந்துள்ளனர்.
News February 6, 2026
மேகாலயா விபத்து: பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வு!

<<19059696>>மேகாலயா<<>>வில் சட்டவிரோதமாக இயங்கி வந்த சுரங்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18-ஆக உயர்ந்துள்ளது. வெடி விபத்தால், நுழைவு பகுதியில் பாறைகள் விழுந்து மூடியதில், சுரங்கத்திற்குள் பலர் சிக்கியுள்ளனர். மாநில பேரிடர் மீட்பு படை, போலீசார் இணைந்து மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்து குறித்து மேகாலயா CM-மிடம் உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டறிந்துள்ளார்.
News February 6, 2026
உலகிலேயே USA தான் சக்திவாய்ந்த நாடு: டிரம்ப்

உலகிலேயே USA தான் மிகவும் சக்திவாய்ந்த நாடு என டிரம்ப் கூறியுள்ளார். தனது பதவிக்காலத்தில் USA-ன் ராணுவ பலத்தை கட்டியெழுப்பியுள்ளதாக கூறிய அவர், அதில் பல அணு ஆயுதங்களை புதுப்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், அணு ஆயுத பயன்பாடு குறித்து நீண்ட காலம் நீடிக்கும் ஒரு புதிய ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டும் எனவும் பல போர்களை தான் நிறுத்தியுள்ளதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.


