News October 23, 2024

சிட்கோ தொழிற்பேடையில் தொழில்மனை அமைக்க வாய்ப்பு

image

திருவண்ணாமலை மாவட்டம் பெரியகோளாப்பாடி பகுதியில் அமைந்துள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் 103 காலி தொழில்மனைகளை சிறு, குறு தொழில்முனைவோருக்கு ஒதுக்கீடு செய்யத் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தொழில் தொடங்க விரும்புவோர் http://www.tansidco.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் அல்லது 9445006558 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

Similar News

News February 1, 2026

தி.மலை வாக்காளர்கள் கவனத்திற்கு…

image

திருவண்ணாமலை மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!

News February 1, 2026

தி.மலை தாய்மார்களுக்கு ரூ.11,000

image

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) மூலம் கர்ப்பிணிகள் & பாலூட்டும் தாய்மார்களுக்கு மொத்தம் ரூ.11,000 உதவி வழங்கப்படுகிறது. முதல் குழந்தைக்கு ரூ.5,000 மற்றும் 2-வது பெண் குழந்தை என்றால் ரூ.6,000 இந்த திட்டம் மூலம் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க அருகிலுள்ள அரசு சுகாதார மையத்தை அணுகலாம். அல்லது இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு 1515-ஐ அழைக்கவும். ஷேர் பண்ணுங்க.

News February 1, 2026

தி.மலை: கோடி கோடியாய் கொட்டிய காணிக்கை

image

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், ஜனவரி மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணி இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில், பக்தர்கள் ரூ.5.68 கோடி ரொக்கமாகவும், 190 கிராம் தங்கத்தையும், 2390 கிராம் வெள்ளியையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். முதல் நாள் ரூ.5.4 கோடியும், இரண்டாம் நாள் ரூ.22.77 லட்சமும் எண்ணப்பட்டது. இந்த காணிக்கை எண்ணும் பணி அலங்கார மண்டபத்தில் நடைபெற்றது.

error: Content is protected !!