News October 23, 2024
நெற்பயிர் நீரில்மூழ்கி ரூ.3.50 கோடி இழப்பு

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை, கண்ணங்குடி, திருப்புவனம், காரைக்குடி, சாக்கோட்டை, கல்லல் உள்ளிட்ட பகுதிகளில் 1,045 ஏக்கர் நிலங்களில் மழை நீர் சூழ்ந்து நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகளுக்கு ரூ.3.50 கோடி வரை நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. பயிர் சேதங்கள் குறித்து வேளாண்மை துறையினர் கணக்கெடுப்பு நடத்தியுள்ளனர்.
Similar News
News November 6, 2025
சிவகங்கை: அழகுக்கலை பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்கள் ஒப்பனை அழகுக்கலை மற்றும் பச்சை குத்துதல் போன்ற (Tattoo Making Course, Aesthetic Training Course and Semi Permanent Makeup Courses) பயிற்சிகள் பெறுவதற்கு, தகுதியின் அடிப்படையில் www.tahdco.com என்ற இணையதள முகவரியின் வாயிலாக பதிவு மேற்கொண்டு பயன்பெறலாம் மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.
News November 5, 2025
சிவகங்கை: மீன் வளர்க்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டம், புதிய மீன் வளர்ப்பு குளங்கள் அமைத்தல் திட்டத்தின் கீழ் விருப்பமுள்ள நபர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். கூடுதல் விபரங்களுக்கு மீன்வள ஆய்வாளர் தொடர்பு எண் 9384824553 என்ற அலைபேசி எண்ணிலும், மீன்வள மேற்பார்வையாளர் தரம் II 9790656919 என்ற அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.
News November 5, 2025
சிவகங்கை: மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வருகிற நவ. 15 வரை நீட்டிப்பு; மேலும், கல்வி நிறுவனங்கள் விண்ணப்பத்தினை சரிபார்த்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அலுவலருக்கு அனுப்புவதற்கான கால அவகாசம் வருகிற நவ.25 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் பொற்கொடி தெரிவித்துள்ளார். மேலும் அறிய <


