News October 23, 2024
இப்போதைக்கு கட்டணத்தை உயர்த்த மாட்டோம்: BSNL

தொலைபேசி மற்றும் டேட்டா கட்டணங்களை உயர்த்தும் எண்ணம் தற்போதைக்கு இல்லையென BSNL தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய BSNL தலைவர் ராபர்ட் ரவி, வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சி மற்றும் அவர்களது நம்பிக்கையை பெறுவதே தங்கள் குறிக்கோள் என்றார். மேலும், சோதனை முறையில் வழங்கப்படும் 4ஜி சேவை இந்தாண்டு இறுதிக்குள் முழுமையாக கிடைக்கும் எனவும் கூறினார்.
Similar News
News January 23, 2026
இன்றைய நல்ல நேரம்

▶ஜனவரி 23, தை 9 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 1:30 PM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 9:30 AM ▶திதி: பஞ்சமி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்.
News January 23, 2026
தினமும் ஷாம்பு பயன்படுத்தி குளிக்கலாமா?

*எண்ணெய் பசை முடி உள்ளவர்கள் தினமும் ஷாம்பு பயன்படுத்தலாம். *வறண்ட மற்றும் சுருள் முடி உள்ளவர்கள் தினமும் ஷாம்பு பயன்படுத்தினால் முடி உலர்ந்து, சேதமடைய வாய்ப்புள்ளது. *அவர்கள் வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்துவது நல்லது. *அதிகமாக ஷாம்பு பயன்படுத்தினால் முடியின் இயற்கையான எண்ணெயை நீக்கி, வறட்சி, உடைதல் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும். *தினமும் ஷாம்பு பயன்படுத்துவது அனைவருக்கும் நல்லதல்ல.
News January 23, 2026
900 இந்தியர்களை விடுவிக்கும் UAE

900-க்கும் இந்தியர்களை UAE விடுதலை செய்ய உள்ளது. இதற்காக கைது செய்யப்பட்டோரின் பட்டியலை அபுதாபியில் உள்ள இந்திய தூதரகத்திடம் ஒப்படைத்துள்ளது. கடந்தாண்டு டிசம்பர் 2-ல் UAE தேசிய தின கொண்டாட்டத்தின்போது, நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து பல கைதிகள் விடுவிக்க உத்தரவிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது இந்தியர்கள் விடுவிக்கப்பட உள்ளனர். இது இரு நாடுகளின் நல்லுறவை பிரதிபலிக்கிறது.


