News October 23, 2024
டானா புயல் எதிரொலியால் 28 ரயில்கள் ரத்து

டானா புயல் எதிரொலி காரணமாக 28 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை நண்பகல் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு சந்திராகச்சி செல்லும் சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை மறுநாள் சாலிமாரில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை மறுநாள் காலை சென்னையில் இருந்து ஹவுரா செல்ல வேண்டிய கோரமண்டல் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Similar News
News December 16, 2025
சென்னை: டிகிரி முடித்தால் ரூ.35,400 சம்பளம்!

சென்னை மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? மத்திய அரசின் டாடா நினைவு மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.35,400 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க, டிச.24ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <
News December 16, 2025
சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

சென்னை மாவட்டத்தில் இன்று (டிச.15) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News December 15, 2025
சென்னையில் கொடூரம்!

நொளம்பூரில் மேரி (70) வசித்து வந்தார். இவர் வீட்டிலிருந்து நேற்று சத்தம் வர, சுற்றத்தார் பார்த்த போது மேரி மயங்கிய நிலையிலிருந்தார். அப்போது மேரி அருகிலிருந்த ஏழுமலையை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். மேரியை மருத்துமனைக்கு அழைத்து சென்றபோது அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவிக்க, போலீசார் ஏழுமலையிடம் விசாரணை செய்ததில் குடிக்க பணம் இல்லையென, மேரியை நகைக்காக கொலை செய்தது தெரியவந்தது.


