News October 23, 2024

விபத்தில் கல்லூரி மாணவி பரிதாப உயிரிழப்பு

image

விழுப்புரம் மாவட்டம் ரெட்டியார் மில் பேருந்து நிறுத்தம் அருகே, நேற்று இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், கல்லூரி மாணவி கவிநிஷா (19) நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பர் சிபிராஜுடன் பைக்கில் சென்றபோது, இந்த விபத்தானது நடந்துள்ளது. படுகாயம் அடைந்த சிபிராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Similar News

News August 13, 2025

விசை தெளிப்பான் வழங்கிய ஆட்சியர்

image

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியம், கோவில்புரையூர் ஊராட்சியில் நடைபெற்றுவரும் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில், வேளாண்மைத்துறை சார்பில், விவசாயிக்கு விசை தெளிப்பானை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று வழங்கினார். உடன் மேல்மலையனூர் வருவாய் வட்டாட்சியர் தனலட்சுமி உட்பட பலர் உள்ளனர்.

News August 13, 2025

திண்டிவனம் – வாலாஜா இடையே புதிய ரயில் பாதை

image

திண்டிவனம், வந்தவாசி, செய்யாறு, ஆரணி, ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜா வரை சுமார் 180 கி.மீ தூரத்திற்கு புதிய ரயில் பாதை திட்டம் அமைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பாதை மூலம் பயணிகள் மற்றும் சரக்கு ரயில்கள் போக்குவரத்து வசதிகள் மேம்பட்டு, பயண நேரம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கிய நகரங்கள் ரயில் மூலம் இணைவதால் பல்வேறு நன்மைகள் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

News August 13, 2025

11,796 வீடுகளுக்கு நேரடியாக ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டது

image

விழுப்புரம் மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் நேற்று (ஆக.12) ஒரே நாளில் 11,796 ரேஷன் அட்டை தாரர்களுக்கு 168 வாகனங்கள் மூலம் ரேஷன் பொருட்கள் அவர்களின் வீட்டிற்கே நேரடியாக சென்று வழங்கப்பட்டுள்ளது. இதனால் 16,940 பயனாளிகள் பயனடைந்துள்ளனர். மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் அடங்கிய 45,052 ரேஷன் கார்டு தாரர்களுக்கு பொருட்கள் நேரடி விநியோகம் செய்யப்பட உள்ளது.

error: Content is protected !!