News October 23, 2024

வடமாநில இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

image

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சீர் முகமது (28), மேடவாக்கம் சிவகாமி நகர் பகுதியில் தங்கி அங்கேயே கட்டிட வேலை செய்து வருகிறார். நேற்று மாலை 5 மணி அளவில், கட்டிட பணி செய்யும்போது எதிர்பாராத விதமாக மின்சார கம்பி அவர் மீது பட்டதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேடவாக்கம் போலீசார் உடலை கைப்பற்றி தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News February 5, 2026

செங்கல்பட்டு: ஏறி இறங்கிய தண்ணீர் லாரி; துடிதுடித்து பலி!

image

வேளச்சேரியை அடுத்த பெரிய கோவிலம்பாக்கம், கே.பி.ஜி., நகரைச் சேர்ந்தவர் மாதவன் (70). இவர், நேற்று காலை எஸ்.கொளத்துார் பிரதான சாலை வழியாக நடந்து சென்றார். கோவிலம்பாக்கம் குளம் அருகே சென்ற போது, ரிவர்ஸில் வந்த தண்ணீர் லாரி மோதி உயிரிழந்தார். பள்ளிக்கரணை போக்குவரத்து போலீசார் விபத்து ஏற்படுத்திய தண்ணீர் லாரி ஓட்டுநரான மடிப்பாக்கம், ராஜாஜி நகரைச் சேர்ந்த சதீஷ் (33) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

News February 5, 2026

செங்கல்பட்டு: நடுவழியில் பற்றி எரிந்த கார்

image

சென்னை தி.நகர் பகுதியை சேர்ந்தவர் கோபி, இவர் நேற்று தனது மனைவியுடன் சென்னையில் இருந்து பொத்தேரி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். கூடுவாஞ்சேரி அடுத்த வல்லாஞ்சேரி ஜி.எஸ்.டி. சாலையில் செல்லும்போது திடீரென காரின் முன் பக்கத்தில் இருந்து புகை வந்தது. சுதாரித்துக்கொண்ட கோபி காரை விட்டு இறங்கினார். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும், கார் தீயில் எரிந்த நாசமானது.

News February 5, 2026

செங்கல்பட்டில் விவசாயி தற்கொலை!

image

செய்யூர் தாலுகா நடுத்திட்டு முகையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுகுமாரன்(45). விவசாயியான இவர், தனது மனைவி பிரவீனா உடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக 3 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறினார். தொடர்ந்து, மாதவரம் 200 அடி சாலைக்குச் சென்று அங்குள்ள தண்ணீர் குழாயில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று(பிப்.4) அழுகிய நிலையில் சடலத்தை மீட்ட போலீசார், இதுகுறித்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!