News October 23, 2024
இன்று புதனை வழிபட்டால் தொழில் போட்டி நீங்கும்

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பது பழமொழி. புதன்கிழமை வழிபாடு மிகவும் சிறப்பான பலன்களை தரும் என்பது நம்பிக்கை. ஒவ்வொரு வாரமும் புதன் கிழமைகளில் புதன் பகவானுக்கான ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திர நாட்களில் வீட்டில் விளக்கேற்றி வழிபட்டு வந்தால் தொழில் போட்டிகள் நீங்கி சிறப்பாக இருக்கும் என்பது ஐதீகம். இதுபோல சிறப்பு வாய்ந்த நாள் புதன் கிழமை. இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.
Similar News
News January 21, 2026
அச்சச்சோ.. PAK பாதுகாப்பு அமைச்சருக்கே இந்த நிலையா!

ஊரெங்கும் விளம்பரங்களும் போஸ்டர்களும் அடிக்கப்பட கோலாகல வரவேற்புடன் பாக். பாதுகாப்பு துறை அமைச்சர், ‘Pizza Hut’ கடையை திறந்து வைக்கிறார். அடுத்த சில மணி நேரங்களிலேயே அந்த கடை தங்களுடையது அல்ல என ‘Pizza Hut’ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறது. இச்செய்தி வெளியானவுடன், பாக். பாதுகாப்பு துறை அமைச்சரை இவ்வளோ ஈசியா ஏமாத்திட்டாங்களே என சர்வதேச அளவில் பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.
News January 21, 2026
வைத்திலிங்கம் திமுகவில் இணைய இதுதான் காரணமா?

KAS பேச்சுவார்த்தை நடத்தியும் மசியாத வைத்திலிங்கம், செந்தில் பாலாஜியின் காய்நகர்த்தலின்படி திமுகவில் இணைந்துள்ளார். இவருடைய இந்த முடிவுக்கு திரைமறைவில் நடந்த டீலிங் தான் காரணம் என்கின்றனர். அதாவது, வரும் தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியின் சீட்டை வைத்திலிங்கம் (அ) அவரது மகன் பிரபுவுக்கு வழங்குவதாக ஸ்டாலின் உறுதியளித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அவர் திமுகவுக்கு தாவியுள்ளார் என்கின்றனர்.
News January 21, 2026
வெறுப்பு கருத்துகளை பேசுகிறார் உதயநிதி: கோர்ட்

சனாதன தர்மத்துக்கு எதிராக உதயநிதி வெறுப்பு கருத்துகளை பேசுவதாக சென்னை HC மதுரை கிளை சாடியுள்ளது. 2023-ல் சனாதனம் பற்றி பேசிய வழக்கை விசாரித்த கோர்ட், இந்து மதத்தின் மீது திகவும், திமுகவும் கடந்த 100 ஆண்டுகளாக தாக்குதல் நடத்துகின்றன என கூறியுள்ளது. மேலும், வெறுப்பு கருத்தை பேசுபவர்கள் தப்பித்துவிடுவதாகவும், அதனை எதிர்ப்பவர்களே தண்டிக்கப்படுவதாக கூறி அமித் மாளவியா மீதான வழக்கை ரத்து செய்துள்ளது.


