News October 23, 2024

திருவள்ளூர் விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய செல்போன் மூலம் இயங்கக்கூடிய பம்புசெட் கட்டுப்படுத்தும் கருவி வேளாண் பொறியியல் துறை மூலம் மானிய விலையில் வழங்கப்பட உள்ளது. சிறு, குறு, பெண் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 50 சதவீதம் மானியம், இதர பிரிவினருக்கு 40 சதவீதம் மானியமாக வழங்கப்பட உள்ளது. இதனை பயன்படுத்திக் கொள்ள வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தை தொடர்பு ஆட்சியர் வேண்டுகோள்

Similar News

News February 13, 2026

திருத்தணியில் கொந்தளித்த பெண்கள்!

image

திருவள்ளூர்: திருத்தணி ஒன்றியத்தில் நுாறு நாள் வேலை வழங்க வேண்டும் எனக் கோரி, பல பெண்கள் ஒன்றிய அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீண்டநாளாக வேலை வழங்கப்படவில்லை என்பதால் குடும்ப வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர். உடனடியாக, வேலை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். சம்பவத்தால் அலுவலக வளாகத்தில் பரபரப்பு நிலவியது.

News February 13, 2026

பூந்தமல்லியில் அதிரடி கைது!

image

திருவள்ளூர்: பூந்தமல்லியில் கடந்த மாதம் ஆட்டோ ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில், விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் தப்பிச்சென்ற வாகனத்தை தேடும் பணி நடைபெற்றது. இந்நிலையில், போக்குவரத்து பிரிவு துணை ஆணையாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நேற்று (12.02.2026) சந்தோஷ் என்ற நபரை கைது செய்து, விபத்து ஏற்படுத்திய ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

News February 13, 2026

திருத்தணி: பெண்ணைத் தாக்கி அட்டூழியம்!

image

திருவாலங்காடு, வேணுகோபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியம்மாள்(52). நேற்று முன் தினம் மாலை வழக்கம் போல் ஏரிக்கரைப் பகுதியில் மாடுகளை மேச்சலுக்கு அழைத்துச் சென்றார். அப்போது ஏரிக் கால்வாய் அருகே பைக்கில் வந்த 2 வாலிபர்கள் மது அருந்தி, முனியம்மாளிடம் பணம் கேட்டு மிரட்டினர். அவர் மறுத்ததால் ஆத்திரமடைந்து பீர் பாட்டிலால் தாக்கி, கழுத்தில் இருந்த 2 பவுன் நகையை பறித்துச் சென்றனர்.

error: Content is protected !!