News October 23, 2024

திராவிட நாட்டை கண்டுபிடித்தால் 1000 பொற்காசுகள்

image

மதுரை மாநகர் மாவட்ட பாஜக துணைத் தலைவர் ராஜ்குமார் போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளார். அதில் இந்தியாவில் இந்தியனாகவும், தமிழகத்தில் தமிழனாகவும் வாழ்ந்து கொண்டிருக்கும் எங்களுக்கு திராவிட நாடு எதற்கு?, மக்களே ஓட்டு வங்கி அரசியலுக்காக இல்லாமல் உணர்வில் இந்தியனாகவும் இனத்தில் தமிழனாகவும் வாழ்வோம் என்றும், திராவிட நாட்டை கண்டுபிடித்துக் கொடுத்தால் ஆயிரம் பொற்காசுகள் என சர்ச்சை போஸ்டர் அடித்துள்ளார்.

Similar News

News January 21, 2026

மதுரை: குறைந்த விலையில் கார் வேண்டுமா.?

image

மதுரை தொழிலாளா் நீதிமன்ற நீதிபதி எம்.கே ஜமுனா நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், மதுரை தொழிலாளா் நீதிமன்ற பயன்பாட்டிலிருந்து கழிவு செய்யப்பட்ட கார்கள், வரும் பிப்.3ம் தேதி மாலை 4 மணிக்கு பொது ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளது. ஏலம், தாமரைத்தொட்டி அருகேயுள்ள நீதிமன்ற நீதிபதி குடியிருப்பில் நடைபெறும். ஏலத்தில் பங்கேற்போர் ரூ.2000 முன்பணம் செலுத்தி பெயரை பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தபட்டுள்ளது.

News January 21, 2026

மதுரை: லாரி உரிமையாளர் தற்கொலை.!

image

வாடிப்பட்டி அருகே சேந்தமங்கலத்தை சேர்ந்தவர் முத்து கருப்பன்(43). இவருக்கு சொந்தமாக லாரி உள்ளது. தினமும் மது போதையில் வீட்டிற்கு வந்ததை அவர் மனைவி கடுமையாக கண்டித்துள்ளார். இதனால் மன அழுத்தம் அடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். மதுரை அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு பலியானார். பாலமேடு போலீசார் இது குறித்து விசாரிக்கின்றனர்.

News January 21, 2026

மதுரை: எல்லா CERTIFICATES-ம் இனி உங்க Whatsapp-ல்

image

மதுரை மாவட்ட மக்களே, பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளை எளிதில் பெறலாம். பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!