News March 18, 2024
”கவனத்தை ஈர்க்கும் தென்காசி”

சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், கடையநல்லூர், தென்காசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கியதுதான் தென்காசி தொகுதி. கடந்த தேர்தலில் சுமார் 28 ஆண்டுகள் கழித்து முதல்முறையாக திமுக (தனுஷ்) வெற்றிபெற்றது. இந்த முறை அதிமுக கூட்டணியில் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்), பாஜக சார்பில் ஆனந்தன் அய்யாசாமி போட்டியிட வாய்ப்புள்ளதால், திமுகவின் வெற்றி அவ்வளவு எளிதாக இருக்காது.
Similar News
News September 5, 2025
மீண்டும் கிரிக்கெட்டில் கால் பதிக்கும் ராஸ் டெய்லர்!

கிரிக்கெட்டிலிருந்து ரிட்டயர்டான நியூசிலாந்து ஜாம்பவான் ராஸ் டெய்லர்(41) T20 WC-ல் விளையாட இருக்கிறார். ஆனால் நியூசிலாந்துக்காக அல்ல. அவர் குடியுரிமை பெற்றுள்ள சமோவா நாட்டுக்காக. அந்த அணி, Asia-East Asia-Pacific பிரிவில் தகுதிச் சுற்று ஆட்டத்தில் விளையாடவுள்ளது. நியூசிலாந்து அணிக்காக, 450 சர்வதேச போட்டிகளில் 18,199 ரன்களை குவித்துள்ள அவர், 2022-ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
News September 5, 2025
அதிமுக – பாஜக கூட்டணி மூழ்குகிறது: காங்கிரஸ்

அதிமுக – பாஜக கூட்டணிக்கு தமிழ்நாட்டு மக்கள், கெடு கொடுத்துவிட்டதாக செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். அந்த கூட்டணியிலிருந்து ஏற்கெனவே OPS, டிடிவி தினகரன் விலகிய நிலையில், இப்போது செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கியுள்ளதாக கூறியுள்ளார். அந்த கூட்டணி மூழ்குகின்ற கப்பல் என்பதால் ஒவ்வொருவராக விலகி செல்வதாகவும் பாஜக, அதிமுகவை அழித்துவிடும் எனவும் சாடியுள்ளார்.
News September 5, 2025
SK- ARM காம்போ வென்றதா? மதராஸி Review & Rating

வட இந்தியாவிலிருந்து வரும் சட்ட விரோதமாக தமிழகத்திற்கு வரும் துப்பாக்கிகளை அழிக்க, போலீஸ் அதிகாரி பிஜூ மேனன், மன நோயாளியான SK-வை தேர்ந்தெடுக்க, அதற்கு பிறகு நடப்பதே கதை. ப்ளஸ்: SK கச்சிதமாக நடித்துள்ளார். வித்யூத் ஜம்வால் மிரட்டிவிட்டார். அனிருத் இசை பல காட்சிகளை மெருகேற்றுகிறது. ARM பல இடங்களில் கைதட்டல் பெறுகிறார். பல்ப்ஸ்: அடுத்த என்ன நடக்க போகிறது என ஈஸியாக கணிக்க முடிகிறது. Rating: 2.25/5.