News October 23, 2024
அக்.25இல் உளுந்து சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வருகிற 25ஆம் தேதி காலை 10 மணிக்கு உளுந்து சாகுபடி தொழில்நுட்பங்கள் மற்றும் ஊட்டச்சத்து மேலாண்மை என்ற தலைப்பில் ஒருநாள் இலவச பயிற்சி நடைபெற உள்ளது. விருப்பம் உள்ள அனைவரும் வேளாண்மை அறிவியல் நிலையத்தை நேரில் தொடர்பு கொண்டு, வருகிற 24ஆம் தேதி மாலை 5 மணிக்குள் முன்பதிவு செய்து பயன்பெறலாம்.
Similar News
News August 5, 2025
அக்னிவீரர் ஆள் சேர்ப்பு முகாம்

தமிழகம், மற்றும் புதுச்சேரி ஆகியவற்றில் இருந்து இந்திய விமானப்படைக்கு அக்னிவீரர் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுக்கு, அக்னிவீரர் ஆட்சேர்ப்பு திரளணி தாம்பரம் விமானப்படை நிலையத்தில் வரும் செப்டம்பர் 2ஆம் தேதி முதல் ஆண்களுக்கும் 5ஆம் தேதி முதல் பெண்களுக்கும் நடைபெற உள்ளது. மேலும், தகவல்களை agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் அறியலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News August 5, 2025
நாமக்கல்: கல்லூரி மாணவன் சாதனை

நாமக்கல்: பெரியார் பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியானது அண்மையில் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இந்தத் தடகள போட்டியின் ஒரு பகுதியான நடைபோட்டியில் 20 கி.மீ பிரிவில் கலந்து கொண்ட, ராசிபுரம் முத்தாயம்மாள் கல்லூரி மாணவன் சேர்ந்த எம். ஸ்ரீராம் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தார்.
News August 5, 2025
நாமக்கல்லுக்கு வந்தது ‘வந்தே பாரத்’ ரயில்!

நாமக்கல் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதுபடி:
✓ மதுரையில் இருந்து பெங்களூர் செல்லும் வந்தேபாரத் ரயில் 20671 (செவ்வாய்க்கிழமை தவிர) நாமக்கல்லில் காலை 8.30 மணிக்கு வந்து செல்லும்.
✓ பெங்களூரில் இருந்து மதுரை செல்லும் வந்தேபாரத் ரயில் 20672 (செவ்வாய்க்கிழமை தவிர)நாமக்கல்லில் மாலை 5.25 மணிக்கு வந்து செல்லும்.(SHARE)