News October 23, 2024
முன்னெச்சரிக்கையாக 48,664 மர கிளைகள் அகற்றம் – மாநகராட்சி

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னையில் 48,664 மரங்களின் கிளைகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில் உள்ள மரங்களின் கிளைகள் தொடர்ந்து அகற்றப்பட்டு வருவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. ஜூலை முதல் அக்டோபர் 19 வரை சென்னையில் 2,708 மரங்களின் 48,664 கிளைகள் அகற்றப்பட்டதாக மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
Similar News
News September 13, 2025
சென்னையில் இன்று மின்தடை

சென்னையில் இன்று (செப்.13) பல்வேறு பகுதியில் மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், அடையாறு, எஸ்பிஐ காலனி, பெசன்ட் நகர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் இன்று மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். (ஷேர் பண்ணுங்க)
News September 13, 2025
அரும்பாக்கம் அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை

ஓட்டேரியை சேர்ந்த 31 வயது பெண், ரேபிடோ பைக் ஓட்டி வருகிறார். இவர் கோயம்பேடு முதல் அரும்பாக்கம் வரை வாடிக்கையாளரை அழைத்துச் செல்லும்போது, ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அரும்பாக்கத்தில் வாகனத்தை நிறுத்தி கேள்வி எழுப்பியபோது, பொதுமக்கள் வருவதை பார்த்து அவன் தப்பியதால், பெண் அளித்த புகாரின் பேரில் ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்த இம்ரான் என்பரை கைது செய்தனர்.
News September 13, 2025
சென்னை: கார், பைக் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு

சென்னை மக்களே இன்று 13-ம் தேதி தேசிய லோக் அதாலத் மூலம் நிலுவையில் உள்ள டிராபிக் பைன்கள் முழுமையாக தள்ளுபடி அல்லது 50% வரை குறைக்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்னலில் நிற்காமல் சென்றது, ஓவர் ஸ்பீடு, ஹெல்மெட் அணியாத உள்ளிட்ட 13 வகையான அபராதங்களுக்கு தள்ளுபடி பெறலாம். இதற்கு டோக்கன் பதிவு செய்ய இங்கே<