News October 23, 2024

தீபாவளி – மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

நெல்லை மாவட்ட காவல்துறை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரபல கடைகள் பெயரில் லிங்க்குகளை அனுப்பி குலுக்கல் முறையில் பரிசு அளிப்பதாக வரும் லிங்க்குகளை கிளிக் செய்ய வேண்டாம். உங்களது தனிப்பட்ட தகவல்கள் திருடப்படலாம். ஒரு வேளை நீங்கள் பாதிக்கப்பட்டால் https://cybercrime.gov.in/ ல் புகார் அளிக்கவும். மேலும் 1930 என்ற சைபர் கிரைம் இலவச எண்ணிலும் புகார் அளிக்கலாம் என்றனர்.

Similar News

News August 9, 2025

நெல்லை ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை

image

நெல்லை மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில், தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் செவிலியர், மருந்தாளுநர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட 45 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ரூ.8,500 முதல் ரூ.18,000 வரை சம்பளம். தகுதியான நபர்கள் 11.08.2025 வரை ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <>இங்கே க்ளிக்<<>> செய்யவும். இதை *SHARE* பண்ணுங்க.

News August 9, 2025

ராதாபுரம் இளைஞர் கொலை – குற்றாவளிகள் வாக்குமூலம்

image

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே சங்கநேரியை சேர்ந்த பிரபுதாஸ் கோயம்புத்தூரில் வேலை செய்த போது, எங்களது உறவினர் பெண் தற்கொலை செய்து கொள்ள காரணமாக இருந்தார். இதனால் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தோம். கடந்த 6ம் தேதி பிரபுதாஸை பின் தொடர்ந்தோம் தொடர்ந்து பைக்கில் சென்ற போது அவரை வழிமறித்துக் கொலை செய்தோம் என கைதானவர்கள் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

News August 9, 2025

சென்னைக்கு மேலும் ஒரு சிறப்பு ரயில் அறிவிப்பு

image

சுதந்திர தின கொண்டாட்டம் தொடர் விடுமுறை காரணமாக பொதுமக்கள் வந்து செல்ல வசதியாக திருநெல்வேலி வழியாக செங்கோட்டை சென்னைக்கு சிறப்பு அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மேலும் ஒரு சிறப்பு ரயில் நாகர்கோயிலில் இருந்து நெல்லை வழியாக வருகிற 17-ஆம் தேதி இரவு 11.15 மணிக்கு சிறப்பு ரயில் (வண்டி எண் 06012) புறப்பட்டு தாம்பரம் வரை செல்லும் என தெரிவிக்கபட்டுள்ளது. வள்ளியூருக்கு இரவு 11:25 மணிக்கு வரும்.

error: Content is protected !!