News March 18, 2024
ரயில்வேயில் 9,144 பணியிடங்கள்

நாடு முழுவதும் காலியாக உள்ள 9,144 Technician பணியிடங்களை நிரப்ப இந்திய ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Technician Gr 1 பணியிடத்திற்கு 36 வயதிற்கு உட்பட்டவர்களும், Gr 3 பணியிடத்திற்கு 32 வயதிற்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். கணிணி தேர்வின் மூலம் பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படும். இதற்கு ஏப்ரல் 4ஆம் தேதிக்குள் இணையம் வழியாக விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு இங்கே <
Similar News
News August 10, 2025
இந்த ஆண்டே கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் Ro- Ko?

2027 ODI WC-ல் Ro-Ko கவனம் செலுத்தி வருகின்றனர். ஆனால், BCCI அத்தொடருக்கு இளம் வீரர்கள் கொண்ட அணியை தயார் செய்யும் திட்டத்தில் உள்ளது. இதனால், அக்டோபரில் தொடங்கும் ஆஸி., தொடருடன் Ro-Ko ஓய்வு பெறுவார்கள் என தகவல் வெளிவந்துள்ளது. இருவருக்கும் ஆஸி., மண்ணில் இதுவே கடைசி தொடராக இருக்கலாம் என்பதால், ஆஸி., கிரிக்கெட் நிர்வாகம் Special Send-off நிகழ்ச்சிக்கும் ஏற்பாடுகளை செய்து வருகிறது.
News August 10, 2025
MGR குறித்து சர்ச்சை பேச்சு.. திருமா விளக்கம்

MGR, ஜெ., குறித்து திருமா பேசியது சர்ச்சையான நிலையில், EPS, OPS உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், MGR, ஜெ.,வை அவமதிக்கவில்லை; ஒரு ஒப்பீட்டுக்காக பேசிய தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக திருமா தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். மேலும், அவர்களை விமர்சிக்கும் அளவுக்கு நான் ஒன்றும் பெரிய ஆளும் இல்லை எனக் கூறிய அவர், தன் பேச்சின் முக்கிய நோக்கம் குறித்து தெளிவுப்படுத்தினார்.
News August 10, 2025
அபராத வட்டியை தள்ளுபடி செய்தது TNHB.. செக் பண்ணுங்க!

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் 31.3.2025-க்கு முன்பு தவணை காலம் முடிவுற்ற வீடுகளுக்கு சலுகைகளை அரசு அறிவித்துள்ளது. அதன்படி, *மாதத் தவணை தொகையை தாமதமாக செலுத்தியதற்காக விதிக்கப்படும் அபராத வட்டி. *வட்டி முதலாக்கத்தின் மீது விதிக்கப்படும் வட்டி. *நிலத்தின் இறுதி விலை வித்தியாசத்திற்கான வட்டியில் ஒவ்வொரு ஆண்டிற்கும் 5 மாதத்திற்கான வட்டி முழுமையாக தள்ளுபடி செய்யப்படுகிறது. <