News October 23, 2024
குடியில் இருந்து என்னை மீட்டது அவரே.. ரஜினி உருக்கம்

குடி பழக்கத்தில் இருந்து தன்னை மீட்டது மனைவி லதாதான் என்று ரஜினிகாந்த் தெரிவித்தது மீண்டும் வைரலாகி வருகிறது. தன்னை இன்டர்வ்யூ எடுக்க வந்தபோது லதாவுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், இதையடுத்து 2 பேரும் திருமணம் செய்து கொண்டதாகவும் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார். லதாவை தனக்கு அறிமுகம் செய்து வைத்தது வொய்.ஜி. மகேந்திரன்தான் என்றும், இதற்காக அவருக்கு தாம் கடன்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
Similar News
News January 27, 2026
மனைவிக்காக ப்ரோமோஷன் செய்யும் டிரம்ப்

தனது மனைவியும், US-ன் முதல் பெண்மணியுமான மெலனியா குறித்த ஆவணப்படத்தை காண டிக்கெட் எடுங்கள் என்ற டிரம்ப்பின் ட்விட் சர்ச்சையாகியுள்ளது. பனிப்புயல் ஒருபக்கம், குடியேற்ற அதிகாரிகளால் நடந்த கொலை மறுபக்கம் என அமெரிக்காவே முடங்கியுள்ளது. இதற்கிடையே மெலனியா ஆவணப்படம் வெள்ளை மாளிகையில் சிறப்பு திரையிடப்பட்டது அந்நாட்டு மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் வரும் ஜன.30-ம் தேதி ரிலீசாகிறது.
News January 27, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஊக்கமுடைமை ▶குறள் எண்: 593 ▶குறள்: ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம் ஒருவந்தம் கைத்துடை யார். ▶பொருள்: ஊக்கத்தை உறுதியாகக் கொண்டிருப்பவர்கள், ஆக்கம் இழக்க நேர்ந்தாலும் அப்போதுகூட ஊக்கத்தை இழந்து கலங்க மாட்டார்கள்.
News January 27, 2026
தொப்பியின் விலை ₹4.2 கோடி!

ஆஸி. ஜாம்பவான் டான் பிராட்மேனின் தொப்பி ₹4.2 கோடிக்கு லாயிட்ஸ் கோல்ட் கோஸ்ட் ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. 1947-ம் ஆண்டு நடந்த டெஸ்ட் தொடரில் இந்திய வீரர் ஸ்ரீரங்கா வாசுதேவ் சோஹோனிக்கு தன்னுடைய தொப்பியை பிராட்மேன் பரிசாக அளித்தார் . ‘DG பிராட்மேன்’ & ‘SW சோஹோனி’ பெயர்கள் பொறிக்கப்பட்ட இத்தொப்பி, கடந்த 2024-ம் ஆண்டில் ஏலம்போன அவரது மற்றொரு தொப்பியை (₹2.63 கோடி) விட அதிக விலைக்கு சென்றுள்ளது.


