News October 23, 2024
2ஆவது டெஸ்ட்: புனே மைதானம் ஒரு பார்வை

இந்தியா, நியூசி. இடையே புனேவில் நாளை 2ஆவது டெஸ்ட் தொடங்கவுள்ளது. இந்த மைதானத்தில் முதன்முதலில் 2017இல் டெஸ்ட் நடந்தது. இதில் இந்தியா, ஆஸி. அணிகள் மோதின. இதில் ஆஸி. அணி 333 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரும் வெற்றி பெற்றது. எனினும், 2019இல் நடந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை இன்னிங்ஸ் மற்றும் 137 ரன் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. பின்னர் நாளை 3ஆவது போட்டி நடக்கிறது.
Similar News
News January 19, 2026
BREAKING: தொடர்ந்து 4 நாள்கள் இயங்காது

வாரத்தில் ஐந்து நாள்கள் மட்டுமே வேலை என்ற கோரிக்கையை வலியுறுத்தி, வரும் 27-ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு வங்கி கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. ஜன.24 (4-வது சனி), ஜன.25 (ஞாயிற்றுக்கிழமை), ஜன.26 (குடியரசு தினம்) ஆகிய தேதிகளில் ஏற்கெனவே தொடர் விடுமுறை வருகிறது. 27-ம் தேதி ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டதால் வங்கிகள் 4 நாள்கள் இயங்காது. எனவே, வங்கி தொடர்பான பணிகளை விரைவாக முடித்துவிடுங்கள்.
News January 19, 2026
டெல்லி புறப்பட்டார் அண்ணாமலை

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். பாஜகவின் தேசிய தலைவர் பதவிக்கு தற்போதைய செயல் தலைவராக இருக்கும் நிதின் நபின் மட்டுமே விண்ணப்பித்து இருந்தார். இதனால், நாளை காலை 11 மணிக்கு PM மோடி தலைமையில் நடக்கும் நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் ஒருமனதாக தேர்வு செய்யப்படவுள்ள நிலையில், கட்சித் தலைமை அழைப்பின் பேரில் அண்ணாமலை விரைந்துள்ளார்.
News January 19, 2026
தீ பரவட்டும் என்றால் நடுங்குகின்றனர்: உதயநிதி

அண்ணா பற்ற வைத்த அறிவுத் தீ இன்று வரை கொழுந்துவிட்டு எரிகிறதாக சென்னை புத்தகக் காட்சியில் நடைபெற்று நிகழ்ச்சியில் DCM உதயநிதி தெரிவித்துள்ளார். மேலும் ‘தீ பரவட்டும் என்று சொன்னால்’ இன்றைக்கும்கூட சிலர் பயந்து நடுங்குவதாக குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் வெளியான ‘பராசக்தி’ படத்தில் இடம்பெற்ற தீ பரவட்டும் என்ற வார்த்தையை தணிக்கை குழு நீக்க உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.


