News October 23, 2024
தினம் ஒரு திருக்குறள் (1)

இன்றைய திருக்குறள் மற்றும் அதற்கான விளக்க உரையை காணலாம்.
*குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: கடவுள் வாழ்த்து.
*குறள்: அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
*உரை: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது. SHARE IT.
Similar News
News January 13, 2026
வங்கிக் கணக்கில் பொங்கல் பரிசு ₹3,000

புதுச்சேரியில் பொங்கல் பரிசுத்தொகையாக ₹3,000 வழங்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான கோப்புக்கு துணைநிலை ஆளுநர் அனுமதியளித்த நிலையில், இன்று முதலே பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என நிதித்துறை செயலாளர் அறிவித்துள்ளார். பொங்கல் முடிந்தபின் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பண்டிகைக்கு முன்பே தரப்படவுள்ளது பயனாளிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
News January 13, 2026
காங்கிரஸ் தான் தமிழர்களை அவமதித்தது: பாஜக

நீதிமன்ற விசாரணையில் உள்ள ஜன நாயகன் குறித்த ராகுல் காந்தியின் கருத்து உள்நோக்கம் கொண்டது என பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் CR கேசவன் கூறியுள்ளார். மேலும் அன்றைய காங்கிரஸ் அரசு தான், ஜல்லிக்கட்டை காட்டுமிராண்டித்தனம் என்று இழிவாகக் கூறி, தமிழர்களின் உணர்வை அவமதித்தது என்றும், தற்போது திமுக-காங்., கூட்டணி பிளவுபட்டு வருவதை திசைதிருப்பவே ராகுல் அப்பட்டமாக பொய் சொல்வதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
News January 13, 2026
மீனவர்கள் கைது.. மத்திய அரசுக்கு CM ஸ்டாலின் கடிதம்

<<18842248>>இலங்கை கடற்படை<<>> சிறைப்பிடித்த 10 ராமேஸ்வரம் மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை CM ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், இதுபோன்ற கைது சம்பவங்கள் மீண்டும் நடைபெறுவதை தடுக்க தூதரக ரீதியான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.


