News October 23, 2024
மனைவி டார்ச்சர்: கணவருக்கு டைவர்ஸ் அளித்த கோர்ட்

தினமும் இரவில் 3 முறை உடலுறவு வைக்கச் சொல்லியும், முடியவில்லையேல் திருநங்கையென கூறி டார்ச்சர் செய்த மனைவியிடம் இருந்து கணவருக்கு நீதிமன்றம் டைவர்ஸ் அளித்துள்ளது. பஞ்சாப் பெண் ஒருவர், இதுபோல கணவர், அவரின் குடும்பத்தினரை டார்ச்சர் செய்ததாக கூறப்படுகிறது. கீழ் நீதிமன்றம் கணவருக்கு டைவர்ஸ் அளிக்க, அதை எதிர்த்து மனைவி தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஐகோர்ட், கணவருக்கு விவாகரத்து அளித்தது.
Similar News
News October 21, 2025
இந்திய கிரிக்கெட் வீரர் ஓய்வு

இந்திய கிரிக்கெட் வீரர் பர்வேஸ் ரஸூல், விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். காஷ்மீரில் இருந்து இந்திய அணியில் இடம்பிடித்த முதல் வீரரான இவர், ஒரு டி20 மற்றும் ஒரு ODI போட்டியில் விளையாடியுள்ளார். ஐபிஎல்லில் விளையாடிய முதல் காஷ்மீர் வீரரும் இவர் தான். 17 ஆண்டுகளாக முதல்தர கிரிக்கெட் விளையாடி வரும் இவர் 352 விக்கெட்களுடன் 5,648 ரன்கள் குவித்துள்ளார்.
News October 21, 2025
பட்டாசுகள் வெடித்ததால் அதிகரித்த காற்று மாசு

தீபாவளியை முன்னிட்டு பட்டாசுகள் வெடித்ததன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் காற்று மாசு அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையின் பல பகுதிகளில் காற்று மாசுபாட்டின் அளவு சராசரியாக 350ஆக பதிவாகியுள்ளது. இது நாம் சுவாசிக்கும் காற்று உகந்ததாக இல்லை என்பதை குறிக்கிறது. எங்கும் புகைமூட்டமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
News October 21, 2025
ராசி பலன்கள் (21.10.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.


