News October 23, 2024

பாம்பு இனத்திற்கு ஹாலிவுட் நடிகர் டிகாப்ரியோவின் பெயர்

image

புதிய பாம்பு இனத்திற்கு லியோனார்டோ டிகாப்ரியோவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. கொரோனா சமயத்தில் இமயமலையில் விரேந்தர் பரத்வாஜ் என்பவர், புதிய வகை பாம்பு ஒன்றை கண்டுபிடித்தார். இந்த பாம்பு வகைக்கு லியோனார்டோ டிகாப்ரியோ பெயரை குறிக்கும் விதமாக ‘ஆங்குவிகுலஸ் டிகாப்ரியோய்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. காலநிலை மாற்றம், பல்லுயிர் பாதுகாப்பு தொடர்பாக டிகாப்ரியோ விழிப்புணர்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Similar News

News December 25, 2025

சர்வதேச சந்தையில் தொடர்ந்து உயரும் தங்கம்!

image

ஜெட் வேகத்தில் உயர்ந்து வரும் தங்கத்தின் விலையில் இன்றும் மிகப்பெரிய மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், சர்வதேச சந்தையில் இன்று (டிச.25) 1 அவுன்ஸ்(28g) தங்கம் விலை $1.57 அதிகரித்து $4,479.53 ஆக உள்ளது. வெள்ளியும் 1 அவுன்ஸ்-க்கு $1 உயர்ந்து $71.91-க்கு விற்பனையாகிறது. இதன் தாக்கத்தால் இந்திய சந்தையில் தங்கத்தின் விலை (தற்போது ₹1,02,400) இன்று கணிசமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.

News December 25, 2025

திரைக்கதை மன்னனை கெளரவிக்கிறாரா ரஜினி?

image

திரைக்கதை மன்னனாக போற்றப்படும் இயக்குநர், நடிகர், எழுத்தாளர் என பன்முகத்தன்மை கொண்ட பாக்யராஜ், ஜன.7-ல் 72 வயதை தொடவுள்ளார். அன்றைய தினம் சென்னையில் பாராட்டு விழா நடைபெறவுள்ளது. இதில் ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி பிரபலங்களும் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் இணைந்து ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்தில் நடித்துள்ளனர். உங்களுக்கு பாக்யராஜின் திரைக்கதையில் பிடித்த படம் எது?

News December 25, 2025

திருமண தடையை நீக்கும் வியாழக்கிழமை விரதம்!

image

தேவர்களுக்கே ஆசானான குருபகவானை வியாழக்கிழமை விரதமிருந்து வழிபட்டால் அளப்பரிய பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. தலைக்கு குளித்து மஞ்சள் நிற ஆடை அணிந்து, உணவு சாப்பிடாமல் கோயிலுக்கு சென்று நவகிரக சந்நிதியில் உள்ள குரு பகவானுக்கு சந்தனம், மஞ்சள், குங்குமப்பூ கலந்த பால் கொண்டு அபிஷேகம் செய்யவும். இதனால் திருமண தடை நீங்கும், தொழில் மற்றும் வியாபாரம் சிறந்து செல்வம் பெருகும் என கூறப்படுகிறது.

error: Content is protected !!