News October 23, 2024

பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க ஆளுநர் நெல்லை வருகை

image

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 31வது பட்டமளிப்பு விழா வருகிற 26 ஆம் தேதி சனிக்கிழமை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்று பட்டம் அளிக்க உள்ளார். இதற்காக அவர் நெல்லைக்கு வருகை தர உள்ளார். விழா ஏற்பாடுகளை பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர் மற்றும் அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News November 5, 2025

நெல்லை: முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை

image

களக்காடு கோவில்பத்து பகுதியைச் சேர்ந்த கணவரை இழந்த தமிழ்ச்செல்வி என்ற பெண்ணை கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கடன் கொடுக்கல் வாங்கல் சம்பவத்தில் வழிமறித்து தவசிக்கனி என்பவர் அறிவாளால் வெட்டியுள்ளார். இது குறித்து களக்காடு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். நாங்குநேரி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட தவசிக்கனிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

News November 5, 2025

நெல்லை: பேராசிரியர் மீது கல்லூரி மாணவி புகார்

image

பேட்டை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் மாணவி ஒருவர் முதுகலை இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். அவர், தனது துறை பேராசிரியர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும், கல்லூரி நிர்வாகம் அவருக்கு துணை போவதாகவும் மாவட்ட ஆட்சியர் சுகுமாரிடம் நேற்று புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து போலீசார் மற்றும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News November 4, 2025

நெல்லை: எஸ்ஐ தொடுத்த வழக்கு; நிறுவனத்துக்கு உத்தரவு

image

மாநகர போலீஸ் எஸ்ஐ செல்வம் மருத்துவ காப்பீட்டுக்கு பணம் செலுத்தி வருகிறார். இவர் கால் அறுவை சிகிச்சைக்காக ரூ.2,03,873 செலவு செய்தும் காப்பீட்டு நிறுவனம் ரூ.51,580 மட்டுமே வழங்கியது. மன உளைச்சலில் நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடுத்த நிலையில் நஷ்ட ஈடு ரூ.30,000 மற்றும் மீதமுள்ள காப்பீடு தொகையை வட்டியுடன் சேர்த்து ரூ.2,62,762 வழங்க வேண்டும் என காப்பீட்டு நிறுவனத்துக்கு கோர்ட் உத்தரவிட்டது.

error: Content is protected !!