News October 22, 2024
ரேஷன் அட்டைதாரர்களுக்கு GOOD NEWS

தீபாவளியை முன்னிட்டு, நல்ல தரத்துடன் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்க வேண்டும் என அமைச்சர் சக்கரபாணி உத்தரவிட்டுள்ளார். புகார்கள் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த அவர், அனைத்து ரேஷன் கடைகளிலும் அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு உள்ளிட்டவற்றை இருப்பு வைக்கவும், இருப்பில் உள்ள பொருட்கள் வடகிழக்குப் பருவமழையால் சேதமடையாமல் காத்திடவும் அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News July 7, 2025
5 மாவட்டங்களில் 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு!

கோவை, நீலகிரி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் காலை 10 மணி வரை பரவலாக மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. இதனால், அந்த மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் வெளியே செல்லும்போது முன்னெச்சரிக்கையாக குடையை உடன் எடுத்துட்டு போங்க. உங்க நண்பர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.
News July 7, 2025
கேப்டன்ஷிப் ரெக்கார்ட்… சாதனை படைத்த கில்!

ENG-க்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியை வென்றதன் மூலம், கேப்டன் கில் மாபெரும் சாதனை ஒன்றை படைத்துள்ளார். வெளிநாட்டில் இளம் வயதில் டெஸ்ட் போட்டியை வென்ற வீரர் என்ற பெருமையை கில்(25 ஆண்டுகள் 297 நாட்கள்) பெற்றார். இதற்கு முன்னர் கவாஸ்கர் (26 ஆண்டுகள் 198 நாட்கள்) இச்சாதனையை செய்திருந்தார். இந்த டெஸ்ட் தொடரில் பேட்டிங்கில் தான் இந்தியாவின் பிரின்ஸ் என நிரூபித்து வருகிறார் கேப்டன் கில்.
News July 7, 2025
திருச்செந்தூரானை எப்போது தரிசித்தாலும் புண்ணியம்

‘சொல்ல சொல்ல இனிக்குதடா’ என்பதைப் போல முருகனை நினைக்க நினைக்க வாழ்வில் நன்மை பயக்கும். அப்படிப்பட்ட திருச்செந்தூர் முருகப் பெருமானின் மனம் இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் சூழ நடைபெற்ற குடமுழுக்கால் குளிர்விக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இன்று முதல் ஆக.5 வரை மண்டல பூஜைகள் நடைபெறுகின்றன. இந்த நாள்களில் பக்தர்கள் எப்போது தரிசனம் செய்தாலும் குடமுழுக்கில் கலந்து கொள்கின்ற புண்ணியம் கிடைக்கும். அரோகரா!