News October 22, 2024
பவுன்சர்களை வீசி கோலியை திணறடிப்பேன்: லாபுசாக்னே

கோலிக்கு பவுன்சர்களை வீசி திணறடிக்க தயாராக உள்ளதாக ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லாபுசாக்னே கூறியுள்ளார். 135 கி.மீ வேகத்தில் பவுன்சர் பந்துகளை வீசி கோலியின் ஈகோவை தொட உள்ளதாகவும், அவரை விரைவில் வீழ்த்தி இந்திய அணிக்கு நெருக்கடி கொடுக்க விரும்புவதாகவும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். இந்தியா-ஆஸி. இடையேயான 5 டெஸ்ட் போட்டிகளை கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடர் நவ.22இல் தொடங்குகிறது.
Similar News
News July 7, 2025
சீன அதிபர் ஜி ஜின் பிங் ஓய்வு?

சீன அதிபராக உள்ள ஜி ஜின்பிங், சீன கம்யூனிஸ்ட் கட்சிக்குள் தனது அதிகாரங்களை பிரித்து கொடுக்க தொடங்கியுள்ளாராம். இதனால் அவர் ஓய்வு பெற இருப்பதாக தகவல்கள் உள்ளன. இந்தியா தவிர அனைத்து பிரிக்ஸ் நாடுகளுடன் பொருளாதார உறவை கொண்டிருக்கும் சீனா, பிரிக்ஸ் கரன்சியை உருவாக்குவதில் தீவிரமாக உள்ளது. இப்படியான சூழலில் அவர் ஓய்வு பெற உள்ளதாக வரும் தகவல்கள் அதன் நட்பு நாடுகளிடையே சோர்வை ஏற்படுத்தியுள்ளது.
News July 7, 2025
இனி ஹாஸ்டல்கள் இல்லை ‘சமூகநீதி விடுதிகள்’

தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும் ஏழை மாணவர்களுக்கான பள்ளி, கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது சமூக நீதி பாதையில் முன்னேறி செல்லும் திராவிட மாடல் அரசின் நடவடிக்கைகளில் முக்கியமான ஒன்று என நெட்டிசன்கள் பலரும் வரவேற்று கருத்து பதிவிட்டு வருகின்றனர். உங்கள் கருத்து என்ன? கமெண்ட்ல சொல்லுங்க.
News July 7, 2025
5 மாவட்டங்களில் 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு!

கோவை, நீலகிரி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் காலை 10 மணி வரை பரவலாக மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. இதனால், அந்த மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் வெளியே செல்லும்போது முன்னெச்சரிக்கையாக குடையை உடன் எடுத்துட்டு போங்க. உங்க நண்பர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.