News October 22, 2024
கூலித் தொழிலாளிக்கு ₹2.39 கோடி GST வரி..!

திருப்பத்தூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ராணிபாபு (58), ஏழு நாள்களுக்குள் ₹2.39 கோடி GST கட்ட வேண்டும் என நோட்டீஸ் வந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்து அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். ராணியின் பான் கார்டு, ஆதார் கார்டுகளைக் கொண்டு திருச்சியில் ஒரு நிறுவனம் பதிவு செய்யப்பட்டுள்ளதும், அதன் உரிமையாளர் ராணி எனக் குறிப்பிட்டதுமே இந்த நோட்டீஸ் வரக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
Similar News
News July 7, 2025
கன்னடத்தில் அறிமுகமாகும் அனிருத்

மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் நடித்துவரும் படம் ‘டாக்ஸிக்’. இந்நிலையில், இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்பு, படத்திற்காக யாஷின் பிறந்தநாள் டீசரில் ரவி பஸ்ரூர் இசையமைத்திருந்தார். ஆனால், சில காரணங்களுக்காக அனிருத் இசையமைக்கவுள்ளாராம். இதன்மூலம் கன்னட திரையுலகில் தடம் பதிக்கிறார் அனிருத். இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் 19-ல் ரிலீஸாகவுள்ளது.
News July 7, 2025
மகளிர் உரிமைத்தொகை: வீடு வீடாக விண்ணப்பம்!

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் முதல் முகாமை வரும் 15-ம் தேதி சிதம்பரத்தில் CM ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதனிடையே, இன்று முதல் விண்ணப்பம் வழங்கும் பணி தொடங்கவுள்ளது. இப்பணி 3 மாதங்கள் நடைபெறும் எனவும் சுமார் 1 லட்சம் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் அரசு அறிவித்துள்ளது. மேலும், இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாள்களில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
News July 7, 2025
மீண்டும் சிக்குகிறார் செந்தில் பாலாஜி

2021-23-ல் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் ₹397 கோடி முறைகேடு நடந்ததாக, அப்போதைய அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது அறப்போர் இயக்கம் வழக்கு தொடுத்தது. இந்நிலையில் வழக்கு பதிவு செய்வது குறித்து ஒரு வாரத்தில் முடிவு செய்வதாக தமிழக அரசு கோர்ட்டில் தெரிவித்தது. அப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டால், மீண்டும் ED உள்ளே வரலாம் எனவும் அது கைது வரை கூட நீள வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.