News October 22, 2024
நாகர்கோவில் – மும்பை ரயில் பயணிகளுக்கு அறிவிப்பு

நாகர்கோவிலில் இருந்து இம்மாதம் 24 மற்றும் 27ஆம் தேதிகளில் காலை 6.15 மணிக்கு புறப்படும் மும்பை விரைவு ரயில், விருதுநகர் – மானாமதுரை – காரைக்குடி – திருச்சி தடத்தில் செல்லும். இந்நிலையில், இந்த ரயில் கூடுதலாக மானாமதுரையில் நின்று செல்லும். மேலும், மதுரை, திண்டுக்கல் வழியாக செல்லாது என திருவனந்தபுரம் கோட்ட ரயில்வே இன்று தெரிவித்துள்ளது.
Similar News
News August 13, 2025
குமரி: ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை..!

கன்னியாகுமரி, பெருவிளையில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய செவிலியர் – 25, மருந்தாளுநர் -1, ஆய்வக நுட்புநர் – 3, பல்நோக்கு பணியாளர் – 3, ஆலோசகர் – 1 உள்ளிட்ட பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியுள்ளவர்கள் <
News August 13, 2025
கன்னியாகுமரியில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் அறிவிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் 2025-26ஆம் ஆண்டுக்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 12 வரை நடைபெறும். பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள் பங்கேற்கலாம். வெற்றியாளர்களுக்கு ரூ.1 லட்சம் வரை பரிசுத்தொகை வழங்கப்படும். இதற்கு பதிவி செய்ய ஆக.16ம் தேதி வரை கால அவகாசம்.
News August 12, 2025
குமரி: உங்க தெருவுல நாளைக்கு POWER CUT-ஆ தெரிஞ்சிக்கோங்க…!

கன்னியாகுமரி, செண்பகராமன்புதூர் துணைமின் நிலையங்களில் நாளை (ஆக.13) மின் பராமரிப்பு பணி காலை 9 மணி – மாலை 3 மணி வரை நடக்கின்றது. செண்பகராமன்புதூர், தோவாளை, வெள்ளமடம், திரவியம் மருத்துவமனை, லாயம், தாழக்குடி, சந்தைவிளை, ஈசாந்திமங்கலம், காரியாங்கோணம் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உங்க ஏரியா Whatsapp குரூப்ல உடனே SHARE பண்ணுங்க…