News October 22, 2024
இந்தியாவில் பிரபலமான நடிகர்கள்

‘Ormax Media’ நிறுவனம் மாதந்தோறும் இந்தியாவில் பிரபலமான நடிகர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் தற்போது வெளியிட்டுள்ள செப்டம்பர் மாதத்திற்கான பட்டியலில், நடிகர் விஜய் முதல் இடம் பிடித்துள்ளார். அவரைத் தொடர்ந்து பிரபாஸ், ஷாருக் கான், அஜித், ஜூனியர் NTR, அல்லு அர்ஜுன், மகேஷ் பாபு, அக்ஷய் குமார், ராம் சரண், சல்மான் கான் ஆகியோர் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளனர்.
Similar News
News August 22, 2025
Parenting:குழந்தை ஃபோன் பார்த்துட்டே சாப்பிடுதா? உஷார்

குழந்தைகள் சாப்பிட மறுப்பதால் Modern பெற்றோர் அவர்கள் கையில் ஃபோனை கொடுத்து உணவை ஊட்டுவதை வழக்கமாக்கிவிட்டனர். ஆனால் அப்படி செய்வதால் குழந்தைகளுக்கு பல பிரச்னைகள் ஏற்படுகிறதாம். ஃபோன் பார்த்துக்கொண்டே சாப்பிடுவதால் செரிமானப் பிரச்னைகளில் இருந்து தொடங்கி ஊட்டச்சத்து குறைபாடு, கவனச்சிதறல், குடும்பத்துடன் பிணைப்பு இல்லாமல் போவது போன்ற பிரச்னைகள் அதிகரிக்குமாம். உஷார் பெற்றோர்களே!
News August 22, 2025
‘அம்மா, அப்பா நான் சாகப்போறேன்’.. சோக முடிவு

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா பார்லிமென்டில் நிறைவேறியுள்ள நிலையில், லக்னோவில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையான பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளான். ‘எனது விளையாட்டால் நீங்கள்(பெற்றோர்) கவலை அடைந்துள்ளீர்கள். எனது மரணத்திற்கு யாரையும் குறை கூறவில்லை. நீங்கள் ஒருவரையொருவர் கவனித்து கொள்ளுங்கள் என உருக்கமான கடிதம் எழுதிவிட்டு விபரீத முடிவை எடுத்துள்ளான். இதுகுறித்து போலீஸ் விசாரித்து வருகிறது.
News August 22, 2025
இனி இ-பாஸ்போர்ட் விண்ணப்பிக்கலாம்

<<16434322>>இ-பாஸ்போர்ட்<<>> சேவை நாடு முழுவதும் தொடங்கியுள்ளது. இதற்கு முதலில் இ-பாஸ்போர்ட் இணையதளத்தில் அப்பாயின்மென்ட் பெற்று, பின் மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்களுக்கு நேரில் சென்று வெரிபிகேஷனை முடிக்க வேண்டும். இது வழக்கமான பாஸ்போர்ட்டின் அப்கிரேட் வெர்ஷன் தான். ஆனால், அதற்கு மாற்று கிடையாது. பயோமெட்ரிக் தகவல்கள் கொண்ட சிப் பொருத்தப்பட்டுள்ளதால் இது பாஸ்போர்ட்டுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது.