News October 22, 2024

இவர் பெரிய கோபக்காரர் எம்பி

image

வக்பு மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் எம்பிக்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. திரிணாமுல் காங்., எம்பி கல்யாண் பானர்ஜி எழுப்பிய கேள்விக்கு பாஜக எம்பி அபிஜித் காங்கோபாத்யாய் ஆட்சேபம் தெரிவித்தார். இதனால், கோபமடைந்த கல்யாண் அருகிலிருந்த கண்ணாடி டம்ளரை எடுத்து மேஜையில் அடித்ததால், அவரின் கையை கண்ணாடி டம்ளரின் துண்டு கிழித்துள்ளது. அவரது கையில் 4 தையல்கள் போடப்பட்டுள்ளது.

Similar News

News July 7, 2025

விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விஜய்..!

image

விஜய் செயற்குழு கூட்டத்தை நடத்திய பிறகு ஒர்க் ஃப்ரம் ஹோம் அரசியல்வாதி என்ற விமர்சனத்தை தகர்த்துள்ளார்.இது ஒருபுறமிருக்க கட்சியில் அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்த நிர்வாகிகள் நியமனத்தை தீவிரப்படுத்தியுள்ளார் விஜய். தவெகவுக்கு தற்போது 120 மாவட்ட செயலாளர்கள் உள்ள நிலையில், மாநகரம், நகரம், ஒன்றிய அளவிலான நிர்வாகிகளும், சார்பு அணி நிர்வாகிகளும் விரைவில் நியமிக்கப்பட இருப்பதாக தகவல்கள் உள்ளன.

News July 7, 2025

வீட்டில் வேல் வைத்து வழிபடலாமா?

image

‘வேலுண்டு வினையில்லை’ என்பதிலேயே இதற்கான விடை தெரிந்துவிடும். திருச்செந்தூர் ராஜகோபுரத்தில் திருநீறு பூசப்பட்டு, அதற்கு மேல் செம்பு வர்ணத்தில் ஒரு வேலும் வைக்கப்பட்டது பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. இப்படிப்பட்ட முருகனின் ஆயுதமான வேலினை வீட்டில் வைத்து வழிபட்டால் கர்ம வினைகள் அகற்றப்படும். வேலுக்கே உரிய மூலமந்திரத்தை நா மணக்க மணக்க கூற வாழ்வை செழிப்புறச் செய்வான் வேலாயுத நாயகன்.

News July 7, 2025

ஒரு சுவற்றில் பெயிண்ட் அடிக்க ₹1 லட்சம் செலவு

image

சுவற்றில் பெயிண்ட் அடித்து பார்த்திருப்போம், ஆனால் ஒரு நிறுவனம் அரசு கஜானாவிலே அடித்துள்ளது. ம.பி-ல் உள்ள அரசுப்பள்ளியில் ஒரு சுவற்றில் பெயிண்ட் அடிக்க ₹1,06,984 செலவழிக்கப்பட்டதாம், மற்றொரு பள்ளியில் 10 ஜன்னல்கள், 4 கதவுகள் பொருத்தப்பட்டு பெயிண்ட் அடிக்க ₹2,31,685 செலவானதாம். இப்பணியில் 648 பேர் ஈடுபட்டதாக கூறி செலவுக்கான ரசீதையும் அரசுக்கு வழங்கியது சுதாகர் கன்ஸ்டரக்‌ஷன் எனும் நிறுவனம்.

error: Content is protected !!