News March 18, 2024

ஈரோட்டில் திமுக போட்டி

image

2024-மக்களை தேர்தலில் 21 தொகுதிகளில் களமிறங்கும் திமுக, ஈரோடு நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த தொகுதிகளில் 2019 மக்களவை தேர்தலில், உதயசூரியன் சின்னத்தில் மதிமுக சார்பில் போட்டியிட்ட கணேசமுர்த்தி வெற்றி பெற்றார். இந்நிலையில் தற்போது நடைபெறவுள்ள ஈரோடு மக்களவை தேர்தலில் திமுகவே நேரடியாக களமிறங்கவுள்ளது. இந்த முறை ஈரோடு தொகுதியில் பிரகாஷ் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News August 10, 2025

பெருந்துறை அருகே பைக் மீது லாரி மோதி விபத்து!

image

ஊத்தங்கரையைச் சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மனைவி சிவசக்தி. இருவரும் திருப்பூரில் தங்கி கட்டிட வேலை செய்கின்றனர். நேற்று பைக்கில் சொந்த ஊரான ஊத்தங்கரைக்கு சென்றனர். பெருந்துறை அருகே பெரிய வேட்டு பாளையம் பிரிவு அருகே வந்த போது, பின்னால் வந்த லாரி பைக் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். இதில் சிவசக்தி பலியானார் கோவிந்தன் சிகிச்சை பெற்று வருகிறார்.

News August 10, 2025

ஆசனூர் அருகே தக்காளி வேன் கவிழ்ந்து விபத்து

image

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் இருந்து ஈரோட்டிற்கு, தக்காளி பாரம் ஏற்றி சென்ற மினி வேன், தமிழக கர்நாடக எல்லை அருகே சென்று கொண்டிருந்தபோது, சத்தியமங்கலத்தில் இருந்து சாம்ராஜ்நகர் நோக்கி சென்று கொண்டிருந்த பிக்கப் வேணுடன் மோதி விபத்து ஏற்பட்டது. தக்காளி பழங்கள் ரோட்டில் சிதறின. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News August 10, 2025

ஈரோடு: ரூ.1 லட்சம் சம்பளத்தில் அரசு வேலை APPLY NOW

image

ஈரோடு மக்களே, மத்திய அரசு புலனாய்வு துறையில் தற்போது காலியாகவுள்ள 3717 Assistant Central Intelligence Officer பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிடி முடித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள்,<> இந்த லிங்கை க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி. வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!