News October 22, 2024
மாசடைந்த நீரை பருகிய 13 பேர் வயிற்றுப்போக்கு
பரந்துார், நாகப்பட்டு துணை கிராமத்தில் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டி உள்ளது. மேல் மூடி இல்லாத அந்த தொட்டியில் இருந்த தண்ணீரை குடித்த 13 பேர், வயிற்றுப்போக்கு காரணமாக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தகவலறிந்த, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் நேற்று, நாகப்பட்டு கிராமத்தில் ஆய்வு செய்தனர். கிராம மக்களுக்கு வயிற்றுப்போக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.
Similar News
News November 20, 2024
காஞ்சிபுரத்தில் நாளை மின்குறைதீர் கூட்டம்
காஞ்சிபுரம் வடக்கு கோட்ட மின் நுகர்வோர் கூட்டம், நாளை (நவ.21) வியாழக்கிழமை அன்று நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில், மின் தொடர்பான அனைத்து குறைகளையும் தெரிவித்து பொதுமக்கள் அனைவரும் பயன்பெறலாம் என காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டார நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க
News November 20, 2024
இந்தியில் மாறிய LIC இணையதளம்: திருமா கண்டனம்
காஞ்சிபுரத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, LIC இணையதளத்தை இந்தி மொழியில் மாற்றம் செய்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். பாஜக வேண்டுமென்றே இதுபோன்ற செயல்களைச் செய்து வருகிறது என்றும், இது கண்டிக்கத்தக்கது என்று அவர் குற்றம்சாட்டினார். மேலும், இணையதளத்தை ஆங்கிலத்தில் மாற்றியமைக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
News November 20, 2024
45 பயணிகளை காப்பாற்றிய பேருந்து ஓட்டுநர் பலி
சுங்குவார்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் திரிக்க்ஷன் (47). அரசு பேருந்து ஓட்டுநரான இவர், சுங்குவார்சத்திரத்தில் இருந்து பூந்தமல்லி நோக்கி நேற்று அரசு பேருந்து இயக்கிச் சென்று கொண்டிருந்தார். ஸ்ரீபெரும்புதூர் அருகே திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. பேருந்தை சாதுரியமாக நிறுத்தி, 45 பயணிகளின் உயிரை காப்பாற்றினார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.