News March 18, 2024
புதுக்கோட்டையில் நூல் வெளியீட்டு விழா!

புதுக்கோட்டையில் நேற்று தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் நகரக் கிளை சார்பில் எழுத்தாளர் சி.பாலையா எழுதிய ‘உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா’ என்ற நூல் வெளியீட்டு விழா மூட்டாம்பட்டி ராஜூ தலைமையில் நடைபெற்றது. தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கவிஞர் தங்கம் மூர்த்தி நூலை வெளியிட்டு பேசினார். நானிலம் ஆசிரியர் மணிமொழி உள்ளிட்டோர் நூலை பெற்றுக் கொண்டனர்.
முன்னதாக நகரச்செயலாளர் அடைக்கலம் வரவேற்றார்.
Similar News
News April 3, 2025
புதுக்கோட்டையில் மின்நுகர்வோர் குறைதீர் முகாம்

புதுக்கோட்டை மின்பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட மின்நுகர்வோர் குறைதீர் முகாம் கோட்டம் வாரியாக புதுக்கோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி, கீரனுார்,திருமயம் ஆகிய செயற்பொறியாளர்கள் அலுவலகங்களில் வரும் ஏப்ரல் 5ஆம் தேதி காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. பழுதடைந்த மின்கம்பத்தை மாற்றுவது, தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை மாற்றுவது உள்ளிட்ட குறைகளை இந்த முகாமில் தெரிவிக்கலாம்.
News April 3, 2025
புதுக்கோட்டையில் வேலை வாய்ப்பு

புதுக்கோட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் உதவியாளர் (HELPER) பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 50 காலிப்பணியிடங்கள் உள்ளது. 10, 12, டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் ரூ.15,000 வரை ஊதியம் வழங்கப்படுகிறது. இதுகுறித்து மேலும் அறிய <
News April 2, 2025
புதுக்கோட்டை: பொன் வழங்கும் பொன்வாசிநாதர்

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் பொன்னை வாரி வழங்கும் பொன்வாசிநாதர் கோவில் உள்ளது. இக்கோவில் 800 ஆண்டுகள் பழமையானது. இங்கு புதிதாக வாங்கிய தங்க நகையினை பொன்னால் ஆன இறைவனுக்கு அர்ச்சனையில் வைத்து வழிபட்டால், வீட்டில் மேலும் மேலும் பொன் செல்வம் பெருகுமென நம்பப்படுகிறது.மேலும், நகை கடை வைத்திருப்பவர்களின் தொழில் மேம்படும். உடனே உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு SHARE செய்து செல்வம் பெருக்க உதவுங்கள்.