News March 18, 2024
பெரம்பலூரில் களமிறங்கும் திமுக!

2024-மக்களை தேர்தலில் 21 தொகுதிகளில் களமிறங்கும் திமுக, பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறது. இந்த தொகுதிகளில் 2019 மக்களவை தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட்ட பாரிவேந்தர் வெற்றி பெற்று எம்பியானார். இந்நிலையில் இவர் பாஜகவில் இணைந்துள்ளதால், திமுக சார்பில் இந்த தொகுதியில் யார் போட்டியிடுவார் என எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
Similar News
News July 11, 2025
பெரம்பலூர் வருகை தரும் பிரதமர் மோடி

பெரம்பலூர் மாவட்டத்திற்கு வரும் ஜூலை 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தரவுள்ளார். அதற்கு முன்னதாக அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் ஆடி திருவாதிரை நிகழ்வில் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பிரதமர் மோடியின் தமிழக வருகை அரசியல் வட்டாரங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.
News July 11, 2025
பெரம்பலூர்: குரூப்-4 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு

➡️ தமிழகத்தில் நாளை 13.8 லட்சம் பேர் குரூப்-4 தேர்வு எழுத உள்ளனர்
➡️ தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்
➡️ ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்
➡️ BLACK INK BALL POINT பேனாவுக்கு மட்டுமே அனுமதி
➡️ காலை 9 மணிக்கு முன்னதாக தேர்வறைக்குள் செல்வது கட்டாயம்
➡️ வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய அனுமதி இல்லை
➡️ இதனை தேர்வு எழுத உள்ள நபர்களுக்கு SHARE செய்யவும்!
News July 11, 2025
பெரம்பலூர்: மாணவர்களுக்கு திறன் பயிற்சி அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் தொழில் நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரத்தினை முன்னிட்டு பல்வேறு தொழில் நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள் ஜூலை 15 வரை நடைபெறவுள்ளன. ஆகவே, அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்கு திறன் பயிற்சி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஜூலை 15-ம் தேதி அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் பெரம்பலூர் மற்றும் குன்னத்தில் நடைபெற உள்ளது என ஆட்சியர் அறிவித்துள்ளார். SHARE IT NOW…