News March 18, 2024

தமிழகத்தில் இருந்து போட்டியிடுகிறேன்

image

தெலங்கானா, புதுச்சேரி ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்த தமிழிசை செளந்தரராஜன் மக்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியானது. இதனை உறுதி செய்த தமிழிசை, மீண்டும் தீவிர அரசியலுக்கு வருவதாக தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் புதுச்சேரியில் போட்டியிடவில்லை, தமிழகத்தில் இருந்து போட்டியிட உள்ளதாக கூறினார். மேலும், எந்த தொகுதி என்பதை கட்சித் தலைமை அறிவிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

Similar News

News October 20, 2025

சற்றுமுன்: அனைத்து பள்ளிகளுக்கும்…

image

அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் பொதுத்தேர்வு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது, காலாண்டு தேர்வில் குறைந்த மார்க் எடுத்த 10, +12-ம் வகுப்பு மாணவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு பள்ளிநேரம் முடிந்த பிறகு, சிறப்பு வகுப்புகள் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. தீபாவளி விடுமுறைக்குபின் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News October 20, 2025

ரயில் பயணத்தில் பிரச்னையா.. இந்த App உங்களுக்குத்தான்

image

உங்கள் ரயில் பயணத்தை பயமின்றி அனுபவிக்க ‘Railmadad’ என்ற செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள். இதில், கோச் சுகாதாரம் தொடர்பான பிரச்னைகளை புகாராக பதிவு செய்யலாம். உங்களது லக்கேஜ் தொலைந்தாலோ, சக பயணிகளால் தொந்தரவு ஏற்பட்டாலோ, இதில் ரயில் எண், கோச் & சீட் எண்ணை பதிவு செய்து புகார் தெரிவிக்கலாம். இது 24 மணி நேரமும் செயல்படுகிறது. இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.

News October 20, 2025

கோலாகலமாக தீபாவளி கொண்டாடிய பிரபலங்கள்

image

திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது குடும்பத்தினருடன் கோலாகலமாக தீபாவளி பண்டிகையை கொண்டாடி SM-ல் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். இதில் நடிகை சமந்தா சற்று வித்தியாசமாக தொண்டு நிறுவனத்தில் குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடியுள்ளார். புகைப்படங்களை மேலே SWIPE செய்து பார்க்கவும்.

error: Content is protected !!