News March 18, 2024
தேனியில் திமுக போட்டி என அறிவிப்பு!

2024 மக்களை தேர்தலில் 21 தொகுதிகளில் களமிறங்கும் திமுக, தேனி நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த தொகுதிகளில் 2019 மக்களவை தேர்தலில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஈ.வெ.கி.ச.இளங்கோவன் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்த நிலையில், திமுக சார்பில் யார் இந்த தொகுதிகளில் களம் இறங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News September 10, 2025
தேனி மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

தேனி மாவட்டத்தை சார்ந்த, முன்னாள் படைவீரர்கள் சிறப்புக் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 10.09.2025 ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இதில் முன்னாள் படைவீரர்கள், படைப்பணியில் பணிபுரியும் வீரர்களை சார்ந்தோர்களுக்கு கோரிக்கைகள் ஏதுமிருப்பின், தங்கள் கோரிக்கைகள் தொடர்பான மனு மற்றும் அடையாள அட்டை நகலுடன் இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News September 10, 2025
தேனி மாவட்டத்தில் இரவு ரோந்து காவலர் விபரம்

தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம், ஆண்டிபட்டி, தேனி, போடிநாயக்கனூர், உத்தமபாளையம் தாலுகாக்களில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் கைபேசி எண்கள் மற்றும் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவசர தேவைகளுக்கு இந்த விவரங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். இன்று (08.09.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் விவரம்.
News September 10, 2025
நாளை 10.09.2025 ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

தேவதானப்பட்டி, போடிநாயக்கனூர், தேனி, பெரியகுளம் வட்டாரம் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நாளை (10.09.2025) புதன்கிழமை நடைபெறும் இடங்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் இம்முகாமில் கலந்து கொண்டு, ரேஷன் கார்டு, ஆதார் திருத்தம், மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட தேவைகளை நிவர்த்தி செய்யலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.