News March 18, 2024
காஞ்சிபுரத்தில் போட்டியிடும் திமுக!

2024-மக்களை தேர்தலில் 21 தொகுதிகளில் களமிறங்கும் திமுக, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த தொகுதிகளில் 2019 மக்களவை தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட்ட செல்வம்(காஞ்சிபுரம்), டி.ஆர்.பாலு(ஸ்ரீபெரும்புதூர்) ஆகியோர் வெற்றி பெற்று எம்பியாகினர். இந்நிலையில் இந்த தேர்தலில் யார் இந்த தொகுதிகளில் களம் இறங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News April 7, 2025
அங்கன்வாடி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 107 அங்கன்வாடி பணியாளர், 11 குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் 79 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 25-35 வயதுடைய 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் விண்ணப்பிக்கலாம். 23ஆம் தேதிக்குள் இந்த லிங்கை <
News April 7, 2025
1,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

காஞ்சிபுரம், தயாா்குளம் எம்.ஜி.ஆா். நகா் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக நேற்று (ஏப்ரல் 6) போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்படி, மாவட்ட வழங்கல், நுகர்வோர் குழுவினர் வீட்டில் சோதனை நடத்தினர். அதில், உரிய ஆவணங்கள் இன்றி 30 மூட்டைகளில் 1,500 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
News April 7, 2025
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 பேர் கைது

ஸ்ரீபெரும்புதுார் போலீசார் ஆரநேரி அரசு பள்ளி அருகே நேற்று (ஏப்ரல் 6) கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, வடமாநில இளைஞரை பிடித்து விசாரித்ததில், உ.பி.,யைச் சேர்ந்த சின்டூ (27) என்பவர், கேரளாவைச் சேர்ந்த அபுஷாகீர் (37) என்பவரிடமிருந்து கஞ்சாவை வாங்கி விற்பனை செய்து வந்தது தெரிந்தது. இதுதொடர்பாக, அபுஷாகீர் (37), மம்தாஜ் பாபி (49), பிஷ்வஜீத் (30), ஷிபு (24), சின்டூ (27) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.