News March 18, 2024
தூத்துக்குடியில் திமுக மீண்டும் போட்டி

2024 மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக போட்டியிடவுள்ளது. கடந்த 2019 மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் கனிமொழி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் தற்போது நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் தூத்துக்குடியில் மீண்டும் திமுகவே களமிறங்கவுள்ளது. இந்த முறையும் தூத்துக்குடியில் கனிமொழியே போட்டியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 10, 2025
தூத்துக்குடியில் நாளை பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

தூத்துக்குடி மாநகராட்சியின் வாராந்திர பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் நாளை (10.09.2025) நடைபெற உள்ளது. மாண்புமிகு மேயர் அவர்கள் தலைமையில் நடைபெறும் இந்த முகாமில் சொத்து வரி, குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, பெயர் மாற்றம், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட பிரிவுகளில் பொதுமக்கள் மனுக்கள் பெறப்படும். இம்முகாம் மேற்கு மண்டல அலுவலகத்தில் நடைபெறும் என மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்தார்.
News September 10, 2025
திருச்செந்தூரில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டத்திற்குட்பட்ட மகாராஜா நகரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் இன்று (09.09.2025), நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சிபர் சுகுமாறன், திருச்செந்தூர் வட்டாட்சியர் பாலசுந்தர் ஆகியோர் உள்ளனர்.
News September 9, 2025
கோவில்பட்டி: வீடியோ காலில் பேசிவிட்டு தற்கொலை

கோவில்பட்டி எஸ்.எஸ். நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் (35). இவரது மனைவி காயத்ரி துபாயில் வேலை பார்த்து வருகிறார். இன்று அதிகாலை 2 மணியளவில் சுரேஷ் அவரது மனைவி காயத்ரியுடன் வீடியோ காலில் பேசியுள்ளார். அப்போது மனையுடன் சண்டை போட்டுவிட்டு தான் தற்கொலை செய்து கொள்வதாக கூறி போனை ஆப் செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.