News March 18, 2024

புதுக்கோட்டை அருகே 10 பேர் சிக்கினர் 

image

வடகாடு அருகே வாணக்கன்காடு முத்துமாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல்விழா நேற்று நடைபெற்றது. விழாவில் போலீசார் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு காளைகளை அவிழ்த்து விட்டதாக, கருக்காகுறிச்சி பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜன், ராஜேஷ், ராம்குமார்,அஜித், ஷீதரன் , வீரையா,குணா, பாலு, பாஸ்கர், தியாகராஜ் ஆகிய 10 பேர் மீது வடகாடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News January 25, 2026

புதுக்கோட்டை: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

image

புதுக்கோட்டை மக்களே..உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோன்று, A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!

News January 25, 2026

புதுக்கோட்டை: இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

image

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.

News January 25, 2026

புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 பேர் கைது

image

புதுகை மாவட்டம் கொப்பனாபட்டி பகுதியில் சுப்பையா (70), பழனிச்சாமி (61), மெய்யகவுண்டம்பட்டி பகுதியில் அசோக் குமார் (32), விராலிமலை இடையபட்டி பகுதியில் பாண்டியன் (51), ராசாநாயக்கன்பட்டி பகுதியில் இளங்கோவன் (51) ஆகிய 5 பேரும் நேற்று குட்கா பொருட்கள் விற்பனை செய்து கொண்டிருந்தனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை கைது செய்து குட்கா பொருட்களை பறிமுதல் செய்து பிணையில் விடுவித்தனர்.

error: Content is protected !!