News March 18, 2024

மதிமுகவிற்கு திருச்சி தொகுதி ஒதுக்கீடு

image

திமுக – மதிமுக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு திருச்சி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதிமுக 2 தொகுதிகளில் போட்டியிட விரும்பிய நிலையில், ஒரு தொகுதி தான் திமுக ஒதுக்கியது. இதனால், விரும்பிய தொகுதியை வழங்க வேண்டும் என மதிமுக பிடிவாதமாக கூறியது. இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் வசம் இருந்த திருச்சி தொகுதி, தற்போது மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

Similar News

News April 16, 2025

விஜய்க்கு எதிராக ஃபத்வா

image

அகில இந்திய முஸ்லிம் ஜமாத் என்ற அமைப்பு விஜய்க்கு கண்டனம் தெரிவித்து ஃபத்வா வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழக இஸ்லாமியர்கள் விஜய்யிடம் இருந்து தள்ளி இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. குடிகாரர்கள் மற்றும் சூதாடுபவர்களை இஃப்தார் விருந்துக்கு அழைத்து வந்து, விஜய் பாவம் செய்துவிட்டதாக ஜமாத் குறிப்பிட்டுள்ளது. மேலும், விஜய்யை எந்த நிகழ்ச்சிக்கும் அழைக்க வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.

News April 16, 2025

இந்தியா வருவதை உறுதி செய்த USA துணை அதிபர்

image

USA துணை அதிபர் ஜேடி வான்ஸ், வரும் 18 முதல் 24-ம் தேதிகளில் இந்தியா மற்றும் இத்தாலிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளார். இருநாடுகளின் தலைவர்களைச் சந்தித்து பொருளாதாரம் மற்றும் புவிசார் அரசியல் குறித்து விவாதிக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஜேடி வான்ஸ், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அவரது மனைவி உஷா மற்றும் 3 குழந்தைகளுடன் இந்தியா வர உள்ளதாக வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

News April 16, 2025

ஹஜ் பயணம் – பிரதமருக்கு CM ஸ்டாலின் கடிதம்

image

தனியார் ஹஜ் ஒதுக்கீடு ரத்து குறித்து பிரதமர் மோடிக்கு CM ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் ஹஜ் புனிதப் பயணத்திற்கு ஆவலுடன் தயாராகி வரும் தமிழகம் உட்பட ஆயிரக்கணக்கான இந்திய இஸ்லாமியர்களுக்கு இந்த செய்தி மிகுந்த வருத்தத்தை உண்டாக்கி உள்ளதாக அவர் தெரிவித்தார். சவுதி அரசிடம் இதுகுறித்து பேசி தீர்வு காண வேண்டும் எனவும் CM ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

error: Content is protected !!