News October 21, 2024
தேனி மாவட்ட ஆட்சியரின் புதிய முயற்சி
ஜவுளித்துறையில் மண்டல வாரியாக டிஜிட்டல் முறையில் மேம்படுத்தி பயிற்சியாளர்களை உருவாக்க உள்ளனர். மேலும் இதுபற்றி குறித்த தகவல்களுக்கு மண்டல துணை இயக்குநர் அலுவலகம் துணிநூல்துறை அறைஎண்:502, 5ஆம் தளம் மாவட்ட ஆட்சியர் வளாகம் திருப்பூர் மாவட்டம் என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது 0421 – 2220095 என்ற தொலைப்பேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்
Similar News
News November 20, 2024
சபரிமலையில் 5 நாட்களில் 3 லட்சம் பக்தர்கள் தரிசனம்
சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டு 5 நாட்களில் ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு மூலம் 3 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து உள்ளனர். பெரிய பாதை வழியாக நடைபயணமாக 28 ஆயிரத்து 300 பேர் சபரிமலையில் தரிசனம் செய்து உள்ளனர். புல்மேடு வழியாக 106 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். வெளி மாவட்டத்தில் இருந்து வரும் பக்தர்கள் வருகை தர தொடங்கினர்.
News November 20, 2024
தேனியில் தொடர் திருட்டில் ஈடுப்பட்ட கொள்ளையர்கள் கைது
தேனியில் தொடர் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய மூர்த்தி, அம்சராஜை காவலில் எடுத்த போலீசார் விசாரணை நடத்தினர். இதில் திருடியதை குற்றவாளிகள் ஒப்புக்கொண்டதைத்தொடர்ந்து அவர்களிடம் இருந்து 88 பவுன் நகையை போலீஸார் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் பல பகுதிகளில் வீடுகளில் கொள்ளை அடித்த பணத்தில் ஒரு பங்களா, ஒரு நூற்பாலையை விலைக்கு வாங்கியதும் விசாரணையில் தெரியவந்தது; கோவை சிறையில் இருவருரையும் அடைத்தனர்
News November 20, 2024
பெரியகுளத்தில்; உங்களைத்தேடி உங்கள் ஊரில் முகாம்
பெரியகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (நவ.20) காலை 9 மணி முதல் நாளை (நவ.21) காலை 9 மணி வரை உங்களுடன் உங்கள் ஊரில் முகாம் நடைபெறவுள்ளது. இதில் மருத்துவமனைகள், அலுவலகங்களில் கலெக்டர் தலைமையில் மாவட்ட அளவிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். இன்று மாலை 4:30 மணி முதல் 6 வரை சப்-கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் கலெக்டரிடம் நேரடியாக மனுக்களை வழங்கலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.