News March 18, 2024

திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு

image

2024 மக்களவை தேர்தலில் திருவள்ளூர் தொகுதி திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2019 மக்களை தேர்தலில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினராக டாக்டர் கே.ஜெயக்குமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் தற்போது நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் திருவள்ளூரில் மீண்டும் காங்கிரஸ் களமிறங்கவுள்ளது.

Similar News

News July 4, 2025

திருவள்ளூர் போலிஸ் அடுத்தால் என்ன செய்யலாம் ? 2/2

image

காவல்துறையினர் நியாயமற்ற சோதனை, பறிமுதல், தாக்குதல், வாய்வழி துன்புறுத்தல் அல்லது தொல்லை, சட்ட விரோத கைது அல்லது தடுப்புக்காவல், முறையான நடைமுறைகளை பின்பற்றத் தவறுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டால் மனித உரிமைகள் ஆணையம்/காவல் கண்காணிப்பாளர்/ மஜிஸ்திரேட்டிடம் புகார் அளிக்கலாம். புகார் செய்யும் போது சாட்சி கணக்குகள், மருத்துவ பதிவுகள் (காயமடைந்திருந்தால்), வீடியோ பதிவுகள் (இருந்தால்)
புகைப்படங்கள் தேவை.

News July 4, 2025

திருவள்ளூர் போலிஸ் அடுத்தால் என்ன செய்யலாம் ? 1/2

image

அஜித்குமார் என்ற வாலிபர் போலீசாரின் கண்மூடித்தனமான தாக்குதலால் உயிரிழந்த சம்பவம் மாநிலத்தையே உலுக்கியது. இதுபோன்று போலீசார் விதி மீறி நடந்து கொண்டால், மனித உரிமைகள் ஆணையத்தில் இந்த லிங்க் மூலம் அல்லது (044‑2495 1495) தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். மேலும், மாவட்ட எஸ்.பி-யிடமும் (044-27666555) , மாவட்ட மாஜிஸ்திரேட்டிடமும் புகார் செய்யலாம்.இந்த எண்களை நண்பர்களுக்கும் பகிர்ந்து <<16937806>>தெரியப்படுத்துங்கள் <<>>

News July 4, 2025

அமெரிக்காவில் திருவள்ளூர் எம் பி

image

திருவள்ளூர் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சசிகந்த் செந்தில் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA) சார்பில், வட கரோலினா மாநிலம், ராலீ நகரத்தில் நடைபெறும் 38-ஆவது தமிழ் விழாவில் பங்கேற்க உள்ளார். அமெரிக்காவில் வாழும் தமிழ் குடிகள், இளைஞர், தமிழர்கள் ஒருங்கிணைப்பு தமிழ் வளர்ச்சி மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று பதிவு செய்துள்ளார்.

error: Content is protected !!