News March 18, 2024

புதுச்சேரி தொகுதியில் மீண்டும் காங்கிரஸ்

image

மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி தொகுதி, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினராக வி.வைத்திலிங்கம் போட்டியிடு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த தேர்தலிலும் அவர் மீண்டும் போட்டியிட வாய்ப்புள்ளது.

Similar News

News January 22, 2026

புதுவை: வீட்டில் செல்வம் செழிக்க வழி!

image

புதுவை மாநிலம் திருபுவனையில் அமைந்துள்ள கலியுக ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில், பக்தர்களின் துயர் தீர்க்கும் புண்ணிய ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோயிலில் அருள்பாலித்து வரும் முலவரான வரதராஜபெருமாளுக்கு அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி வழிபட்டால் தீராத கடன் தொல்லைகள் நீங்கி, இல்லத்தில் செல்வம் செழிக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. இத்தகவலை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்

News January 22, 2026

புதுச்சேரி நகராட்சி ஆணையருக்கு புதிய பொறுப்பு

image

புதுச்சேரி நகராட்சி ஆணையராகப் பணியாற்றி வரும் கந்தசாமி, தற்போது கூடுதல் பொறுப்பாக புதுச்சேரி மாநில துணை தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் வரவிருக்கும் தேர்தல்களை முன்னிட்டு, பணிகளை விரைவுபடுத்தவும் ஒருங்கிணைக்கவும் இந்த அதிரடி நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நகராட்சி ஆணையர் கந்தசாமி இனி மாநில தேர்தல் துறையில், துணை தலைமை தேர்தல் அதிகாரியாகச் செயல்படுவார்.

News January 22, 2026

புதுச்சேரி முதல்வரை கடற்படை தளபதி சந்திப்பு

image

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படைப் பகுதியின் தளபதி ரியர் அட்மிரல் சதீஷ் ஷெனாய், இன்று (22.01.2026) முதலமைச்சர் ரங்கசாமி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, புதுச்சேரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், இந்திய கடற்படையில் அக்னி வீரர்கள் மற்றும் அதிகாரிகளாக சேர ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் குறித்து தளபதி அவர்கள் விளக்கமளித்தார்.

error: Content is protected !!