News October 21, 2024
ALERT: இந்த மாவட்டங்களில் மிக கனமழை கொட்டும்

தமிழகத்தில் இன்று தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யலாம் என வானிலை மையம் ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது. சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், கடலூர், அரியலூர், பெரம்பலூர், கரூர், சேலம், நாமக்கல், திருச்சி, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 21 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் எனக் கணித்துள்ளது.
Similar News
News July 6, 2025
ரஜினி & அஜித்துடன் நடிக்க ஆசை: ஷிவம் துபே

தனக்கு ரஜினிகாந்த் & அஜித்குமார் ஆகியோரை மிகவும் பிடிக்கும் என ஷிவம் துபே கூறியுள்ளார். சுரேஷ் ரெய்னா கோலிவுட்டில் அறிமுகமாகவுள்ள பட விழாவில் பேசிய அவர், மேற்கூறிய நடிகர்களுடன் நடிக்க ஆசை என்றும் விருப்பம் தெரிவித்துள்ளார். இது இரு நடிகர்களின் ரசிகர்களையும் குஷிப்படுத்தியுள்ளது. முன்பு, சூர்யாவை ஃபேவரைட் ஹீரோவாக தல தோனி & சின்ன தல இருவரும் கூறியிருந்தனர்.
News July 6, 2025
பட்டாசு ஆலை விபத்து.. CM ஸ்டாலின் நிவாரணம்

விருதுநகர் வெற்றிலையூரணி கிராமத்தில் <<16962592>>பட்டாசு ஆலை வெடி விபத்தில்<<>> பால குருசாமி என்பவர் உயிரிழந்ததை அறிந்து மிகவும் வேதனை அடைந்ததாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு ₹4 லட்சம் வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ₹1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ₹50,000 வழங்கப்படும் என்றும் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
News July 6, 2025
போலீசையும் தண்டிக்கும் BNS 296 சட்டம் தெரியுமா?

நண்பர்களுடன் சாலையில் நின்று பேசிக் கொண்டிருக்கிறீர்கள். அப்போது அங்கு வரும் ஒரு போலீஸ்காரர் மரியாதை குறைவாக, ‘வாடா… போடா’ என பேசினால், அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுக்க முடியும். பாரதீய நியாய சன்ஹிதா (BNS) பிரிவு 296 ஆபாசமாக பேசுதலுக்கு தண்டனையை வழங்குகிறது. குற்றம் என நிரூபிக்கப்பட்டால், 3 மாதங்கள் சிறைத்தண்டனை அல்லது 1000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.