News October 21, 2024

செங்கல்பட்டிலிருந்து திருப்பதிக்கு புதிய பேருந்து சேவை

image

செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பதி வரை காஞ்சிபுரம், அரக்கோணம் வழியாக காலை 4.20 மணிக்கும், பிற்பகல் 12.00 மணிக்கும் செல்லும் காற்று மாசுபாடு இல்லாத பேருந்தினை மக்களின் பயன்பாட்டிற்காக செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், நகர்மன்ற தலைவர் தேன்மொழிநரேந்திரன் ஆகியோர் கொடியசைத்து துவங்கி வைத்தனர். அந்த பேருந்தில் பழைய பேருந்து நிலையம் வரை பயணச்சீட்டு பெற்று பயணித்தனர்.

Similar News

News November 20, 2024

கால்நடை கணக்கெடுப்பு பணி தொடக்கம்

image

செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 21ஆவது கால்நடை கணக்கெடுப்பு பணியை கலெக்டர் அருண்ராஜ் நேற்று தொடங்கி வைத்தார். மாவட்டம் முழுதும் புதிய கால்நடை மருந்தகங்கள் ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில், அச்சிறுபாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காட்டாங்கொள்ளூர், ஆகிய வட்டாரங்கள் உள்ளன.

News November 20, 2024

பண்டிகைகளை முன்னிட்டு ரயில் சேவை நீட்டிப்பு

image

கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகளை முன்னிட்டு, 10 சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் நாகர்கோவில் – தாம்பரம் சிறப்பு ரயில் பிப்.2ஆம் தேதி வரையிலும், வியாழக்கிழமைகளில் இயக்கப்படும் நெல்லை – சென்னை எழும்பூர் ரயில் சேவை பிப்.6ஆம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க

News November 20, 2024

ரயில் சேவையில் மாற்றம்: நோட் பண்ணிக்கோங்க

image

சென்னை எழும்பூர் – விழுப்புரம் மாவட்டத்தின் சிங்கப்பெருமாள் கோயில் – செங்கல்பட்டு ரயில்வே நிலையங்கள் இடையிலான பகுதிகளில் இன்று (நவ.20) முதல் நவ.23ஆம் தேதி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், பிற்பகல் 1.10 மணி முதல் பிற்பகல் 4.10 மணி வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து செங்கல்பட்டு செல்லும் ரயில்கள் சிங்கப்பெருமாள் கோயில் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். ஷேர் பண்ணுங்க