News March 18, 2024
ராணிப்பேட்டை கலெக்டர் அறிவுறுத்தல்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி கூட்டம் இன்று(மார்ச் 18) நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் வளர்மதி தலைமை வகித்து பேசினார். அப்போது, வேட்புமனு நாளில் வேட்பாளருடன் 5 பேர் மட்டுமே வர வேண்டும். 3 வாகனங்கள் மட்டுமே இருக்க வேண்டும். காலை 11 மணி முதல் 3 மணி வரை மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும். சனிக்கிழமை அன்றும் மனு தாக்கல் செய்யலாம் என்றார்.
Similar News
News April 6, 2025
1000 கணக்கில் போதை மாத்திரை கடத்திய இளைஞர்கள்

அரக்கோணம் மதுவிலக்கு அமலாக்க போலீசார் கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல்.4) இரவு ரயில் நிலையப் பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகம் படும்படியாக நின்றுகொண்டிருந்த இரண்டு இளைஞர்களை போலீசார் விசாரித்தனர். அதில் அவர்கள் பையில் 1087 போதை மாத்திரைகளை வைத்திருந்தது தெரியவந்தது. போலீசார் அதனை பறிமுதல் செய்து ஆற்காடு ஜெய்கணேஷ் (21), ராணிப்பேட்டை ஹரிஷ் குமார் (22) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
News April 6, 2025
இராணிப்பேட்டை: கல்விக்கடன் பெற அரசின் சூப்பர் திட்டம்…!

உயர்கல்வி படிக்க விரும்பும் மாணவர்களின் நிதித்தேவையை பூர்த்தி செய்ய பிரதான் மந்திரி வித்யாலஷ்மி யோஜனா திட்டம் மத்திய அரசால் வழங்கப்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.8 இலட்சத்துக்கும் கீழ் உள்ள மாணவர்களுக்கு இத்திட்டம் பொருந்தும். NIRF தரவரிசைப்படி கல்லூரிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. https://pmvidyalaxmi.co.in/ என்ற இணையதளம் மூலம் கூடுதல் விபரங்களை தெரிந்துகொண்டு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
News April 5, 2025
போரில் பூத்த ராணிப்பேட்டை

தமிழ்நாட்டில் கடைசியாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றான ராணிப்பேட்டையின் பெயருக்கு பின்னால் ஒரு சுவாரசியம் உள்ளது.ஆற்காடு நவாப் செஞ்சி மீது படையெடுத்த போது வீரமரணம் அடைந்த ராஜா தேசிங்கு மற்றும் அவருக்காக உடன்கட்டை ஏறிய ராணிபாய்க்காக பாலாற்றின் வடக்கு பகுதியில் புதிய நகரை உருவாக்கி அதற்கு ‘ராணிப்பேட்டை ‘ என பெயரிட்டார்.போரில் பூத்த ராணிப்பேட்டை வரலாற்றை ஷேர் பண்ணுங்க..