News October 21, 2024

ஆரணி புத்திர கமேடீஸ்வரர் ஆலயத்தில்  திருமணம் நடத்திய  எம்பி

image

தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பின்படி தமிழக இந்து சமய அறநிலை துறை சார்பில் இன்று ஆரணி புத்திர காமேடீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற இலவச திருமண விழாவில் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் எம் எஸ் தரணிவேந்தன் கலந்துகொண்டு மணமக்களை ஆசீர்வதித்து அரசு சார்பில் வழங்கப்பட்ட சீர்வரிசைகளை மணமக்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவானந்தம் இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Similar News

News August 18, 2025

தி.மலை: ஆமை கறி சமைத்தவர்கள் கைது

image

தி.மலையை சேர்ந்த அஜித், குமார் இருவரும் நாமக்கல் மாவட்டம் ப.வேலூரில் வேலை செய்து வந்தனர். இவர்கள் கடந்த 8ம் தேதி ப.வேலுார் காவிரி கரையோரம், ஒன்பது ஆமைகளை பிடித்து மருத்துவ குணங்களுக்காக எரித்துள்ளனர். இதை விடியோவாக சமூக வலைதளத்தில் பதிவு செய்த நிலையில், வனத்துறையினர் இருவரையும் கைது செய்து 1 லட்சம் அபராதம் விதித்தனர்.

News August 18, 2025

தி.மலை இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (17.08.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News August 17, 2025

தி.மலை: பெண்கள் பாதுகாப்புக்கு இதை பண்ணுங்க

image

தி.மலை: நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, தி.மலை மாவட்ட பெண்கள் ஏதாவது குடும்ப வன்முறையை எதிர்கொண்டால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலரை (9840369614) அழைத்து புகார் அளிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணு

error: Content is protected !!