News October 21, 2024
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 29 ஜோடிகளுக்கு திருமணம்

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இன்று 29 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது. மேலும் திருமணம் செய்த ஜோடிகளுக்கு சீர்வரிசை கட்டில், மெத்தை, பீரோ வழங்கப்பட்டன. இதில் பெரம்பலூர் எம்பி அருண் நேரு, திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அரங்குழு தலைவர் இளங்கோவன், இணை ஆணையர் பிரகாஷ் மற்றும் ஸ்டாலின் குமார், தலைவர் சரவணன், கோவில் பணியாளர்கள் செய்தனர்.
Similar News
News April 29, 2025
திருச்சி: பெண்களுக்கான இலவச ஆட்டோ ஓட்டுநர் பயிற்சி

திருச்சி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஊரக சுய வேலை வாய்ப்பு நிறுவனம் இணைந்து பெண்களுக்கான 30 நாள் இலவச எலக்ட்ரிக் ஆட்டோ ஓட்டுநர் பயிற்சியை ஏற்பாடு செய்துள்ளது. குறைந்தது 8-ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட 18-40 வயதுடைய பெண்கள் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், இதன் மூலம் மாதம் ரூ.15,000 வருமான கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் 02/05/25 ஆகும். தொடர்புக்கு: 8903363396.
News April 29, 2025
திருச்சி: முக்கிய காவல்துறை அதிகாரிகள் எண்கள்

திருச்சி மாவட்ட மக்கள் கட்டாயம் அறிந்து வைத்திருக்க வேண்டிய முக்கிய காவல்துறை அதிகாரிகள் எண்கள்: திருச்சி எஸ்.பி- 0431-2333603, திருச்சி போலீஸ் கமிஷனர்- 0431-2332566, முசிறி டி.எஸ்.பி- 9498162695, மணப்பாறை டி.எஸ்.பி – 9443659745, லால்குடி டி.எஸ்.பி – 9498160648, திருவெறும்பூர் டி.எஸ்.பி- 9866246303, மாவட்ட குற்றப் பிரிவு- 9498178817, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு- 9498167714. மறக்காம SHARE செய்யவும்
News April 29, 2025
சிசிடிவி கேமரா பொருத்த காவல்துறை அறிவுரை

குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் திருச்சி காவல்துறை முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் உங்கள் வீடு, கடை மற்றும் வணிக நிறுவனங்கள் போன்ற இடங்களில் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க பொதுவெளி மற்றும் சாலை போன்றவை தெரியும்படி சிசிடிவி கேமராக்கள் பொருத்தவும், பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் சந்தேக நபர்கள், சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது மாவட்ட காவல் அலுவலகத்தில் புகார் அளிக்க கூறியுள்ளது.