News October 21, 2024
பெட்ரோலுக்கு இணையாக விலை உயரும் CNG?

வாகனங்களுக்கான CNG எரிவாயு விலை கிலோவுக்கு ₹4 – ₹6 வரை உயர வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. உற்பத்தி சரிவு, பற்றாக்குறை காரணமாக விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் 1 கிலோ CNG ₹90க்கு விற்பனையாகிறது. விலை உயர்ந்தால் 1 கிலோ ₹96 வரை உயரும் எனத் தெரிகிறது. இதனால், அதிகளவில் CNG வாகனங்களை பயன்படுத்தி வரும் கால் டாக்சி, ஆட்டோ ஓட்டுநர்கள் கவலையடைந்துள்ளனர்.
Similar News
News August 13, 2025
உரிமைத் தொகை.. ஆகஸ்ட் 28ல் காத்திருக்கும் குட் நியூஸ்!

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் பொதுமக்களின் மனுக்கள் மீது 45 நாள்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி, ஆக. 28-ம் தேதியுடன் 45 நாள்கள் நிறைவடைவதால், மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பங்களின் நிலை குறித்து அரசு தெரிவிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. தகுதியானவர்களுக்கு பணம் எப்போது டெபாசிட் செய்யப்படும் என்ற விவரத்தையும் விரைவில் அரசு வெளியிடுமாம். SHARE IT.
News August 13, 2025
வழக்கம்போல வரவேற்பும், புறக்கணிப்பும்: விசிக

வழக்கம்போல் கவர்னர் RN ரவி சுதந்திர தின தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்தால், வழக்கம்போல இந்நிகழ்வில் விசிக பங்கேற்காது என திருமாவளவன் தெரிவித்துள்ளார். பிஹார் வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக காங்கிரஸ், CPI, CPI(M), மதிமுக, மமக ஆகிய கட்சிகளும் தேநீர் விருந்தை புறக்கணித்துள்ளன. இதுவரை திமுக தரப்பில் இவ்விருந்தில் கலந்துகொள்வது குறித்து ஏதும் கூறவில்லை.
News August 13, 2025
தோனிக்கு பதில் யார்? பட்டியலில் 5 வீரர்கள்

2026 IPL சீசனில் தோனி விளையாடுவாரா (அ) பாதியில் ஓய்வை அறிவிப்பாரா என்ற கேள்வி கிரிக்கெட் அரங்கில் ஒலித்துக் கொண்டே உள்ளது. ஒருவேளை தோனி விளையாடவில்லை என்றால் CSK-வின் அடுத்த வி.கீ., பேட்ஸ்மேனாக யாரை தேர்ந்தெடுப்பது என்ற பட்டியலும் தயாராகி வருகிறதாம். இதில் சஞ்சு சாம்சன் (RR), உர்வில் படேல் (CSK), ரஹ்மானுல்லா குர்பாஸ் (KKR), இஷான் கிஷன் (SRH) , நாராயண் ஜெகதீசன் (KKR) ஆகியோர் உள்ளனர்.