News October 21, 2024
மதுராந்தகம் அருகே மகனை கொலை செய்த தந்தை

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருணா குளம் பகுதியச் சேர்ந்த பார்த்திபன் (36). இவருடைய அம்மாவின் இரண்டாவது கணவர் கோபால் (68). இன்று காலை கோபாலுக்கும், பார்த்திபனுக்கும் இடையே மது போதையில் ஏற்பட்ட தகராறில் கோபால் கோடாரியை கொண்டு பார்த்திபனின் தலையில் தாக்கியுள்ளார். இதில், சம்பவ இடத்தில் பார்த்திபன் உயிரிழந்தார். மைது குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News August 14, 2025
பராமரிப்பு பணி; சென்ட்ரல் – கூடூர் இடையே ரயில்கள் ரத்து

சென்னை சென்ட்ரல் – கூடூர் இடையே பொறியியல் பணிகள் நடைபெறவுள்ளதால் இன்றும், ஆகஸ்ட் 16 மற்றும் 18 ஆகிய தேதிகளில் 17 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. செங்கல்பட்டில் இருந்து காலை 9.55 மணிக்குக் கும்மிடிப்பூண்டி செல்ல வேண்டிய ரயில் சென்னை கடற்கரை வரை மட்டுமே இயக்கப்படும். அதேபோல், கும்மிடிப்பூண்டியில் இருந்து மாலை 3 மணிக்குத் தாம்பரம் செல்லும் ரயில் சென்னை கடற்கரை வரை மட்டுமே இயக்கப்படும்.
News August 14, 2025
செங்கல்பட்டு காவல்துறை மாற்று வழி அறிவிப்பு

சுதந்திர தினம் மற்றும் வார இறுதி விடுமுறைகள் காரணமாக, சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, வாகன ஓட்டிகள் கிழக்கு கடற்கரைச் சாலை (ECR) மற்றும் செங்கல்பட்டு-திருப்போரூர் சாலை (GWT) போன்ற மாற்று வழிகளைப் பயன்படுத்தலாம் என செங்கல்பட்டு காவல்துறை தெரிவித்துள்ளது. உங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு, பாதுகாப்பாகச் செல்லுங்கள்.
News August 14, 2025
செங்கல்பட்டு காவல்துறை முக்கிய அறிவிப்பு

தொடர் விடுமுறை கருத்தில்கொண்டு, செங்கல்பட்டு காவல்துறை ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை எண் 32 (GST சாலை)-ல் புக்கத்துறை, படாளம் சாலை சந்திப்புகளில் மேம்பாலக் கட்டுமானம் மற்றும் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருவதால், இந்த பகுதிளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட கூடும். பொதுமக்கள் இந்த சாலையை கவனத்துடன் பயணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.