News March 18, 2024
RCB வெற்றி, நடிகர் புனீத் ராஜ்குமாருக்கு சமர்ப்பணம்

2024 WPL தொடரை கைப்பற்றி, பெங்களூரு அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது. குறிப்பாக, நேற்று மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமாரின் பிறந்தநாளில் (மார்ச் 17), RCB அணி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த வெற்றியை நடிகர் புனீத் ராஜ்குமாருக்கு சமர்ப்பிப்பதாக RCB ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். இந்த வெற்றியைத் தொடர்ந்து, ஐபிஎல் தொடரிலும் RCB வெல்லுமா என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
Similar News
News August 18, 2025
தவெக கொடிக்கு தடையில்லை.. ஐகோர்ட் தீர்ப்பு

விஜய்யின் தவெக கொடிக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுத்துள்ளது. தங்கள் கொடியை போல் இருக்கும் தவெக கொடிக்கு தடை விதிக்க கோரி தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை வழக்குத் தொடுத்தது. இதை விசாரித்த ஐகோர்ட், இரு கொடிகளையும் ஒப்பிடுகையில் TVK கொடி முற்றிலும் வேறுபாடானது; TVK கொடியில் மஞ்சள் நிறத்தில் யானை, வாகை மலர், 28 நட்சத்திரங்கள் உள்ளதால் மக்களிடம் எந்த குழப்பமும் இல்லை என தெரிவித்துள்ளது.
News August 18, 2025
அன்புமணிக்கு அழுத்தம்; ராமதாஸின் அடுத்த நடவடிக்கை

ராமதாஸ் தலைமையில் நேற்று (ஆக., 18) நடந்த பாமக சிறப்பு பொதுக்குழுவில் அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. இந்நிலையில் அதற்கு முறையான விளக்கமளிக்குமாறு அன்புமணிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு. இதற்கு விளக்கமளிக்க அன்புமணி மறுக்கும் பட்சத்தில், அவர் கட்சியில் இருந்து நீக்கப்படலாம் எனவும் பாமக வட்டாரத்தில் பேசப்படுகிறது.
News August 18, 2025
உங்க வாழ்க்கை துணையுடன் நெருக்கம் அதிகரிக்க..

தேசிய தம்பதியர் தினத்தில் உங்களின் பார்ட்னருடன் நெருக்கம் அதிகரிக்க 5 டிப்ஸ்.
✦நம்பிக்கையும் பொறுமையும் மிக அவசியம்.
✦எதையும் மறைக்காமல் ஒளிவு மறைவின்றி பேசுங்கள்.
✦பிறந்தநாள், திருமண நாள் போன்றவற்றை கொண்டாட தவறாதீர்கள்.
✦எவ்வளவு பிஸியாக இருந்தாலும், இருவரும் ஒன்றாக நேரம் செலவிடுங்கள்.
✦கடந்த கால மகிழ்ச்சியான தருணங்களை நினைவு கூருங்கள். இது உங்களுக்குள் இருக்கும் இடைவெளியை குறைக்கும்.